தவெக தலைவர் விஜயை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்கள்.. பகீர் சம்பவம்!
Youths Followed TVK Leader Vijay Get Into An Accident | தஞ்சாவூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து வேன் மூலம் சென்றுக்கொண்டு இருந்த தவெக தலைவர் விஜயை பின்தொடர்ந்து சென்ற தொண்டர்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கினர்.
தஞ்சாவூர், மார்ச் 04 : தஞ்சாவூரில் (Tanjore) நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழக (TVK – Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய் சென்றுக்கொண்டு இருந்த நிலையில், அவரை பின்தொடர்ந்து சென்றுக்கொண்டு இருந்த இளைஞர்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து வேனில் சென்ற அவரை தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்ற நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து வேனில் சென்ற விஜய்
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கட்சியை வலுப்படுத்தி வருகிறார். தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் விஜய் கூட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று தஞ்சாவூரில் உள்ள அய்யாச்சாமிபட்டி பகுதியில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவர், அங்கிருந்து கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சாலை மார்கமாக வேனில் சென்றுக்கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க : ராணிப்பேட்டை அருகே விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் கவலைக்கிடம்
தவெக தலைவர் விஜயை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்கள்
தவெக தலைவர் விஜய் வருவதை அறிந்துக்கொண்ட அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அவர் வந்துக்கொண்டு இருந்த பாதையில் அவரை காண்பதற்காக திரண்டிருந்துள்ளனர். அப்போது ஏராளமான இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் அடுத்தடுத்து சாலை விபத்தில் சிக்கியுள்ளனர்.
பலத்த காயமடைந்த இளைஞர்
தவெக தலைவர் விஜயை பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கிய நிலையில், ஒரு இளைஞர் பலத்த காயமடைந்துள்ளார். அவர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தன்னை வாகனத்தின் பின்தொடர வேண்டாம் என விஜய் கேட்டுக்கொண்ட போதிலும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது வாகனத்தை பின்தொடர்ந்து செல்வதால் இத்தகைய விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.