அதிகனமழை எதிரொலி – கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
தித்வா புயல் காரணமாக, நவம்பர் 29, 2025 அன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்ப்டடிருக்கிறது. மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் உத்தரவிட்டார்.
Breaking Tv92 Tamil3
தமிழகத்தில் நவம்பர் 29, 2025 அன்று நாளை திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்ப்டடிருக்கிறது. மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் உத்தரவிட்டார்.