வேகமெடுக்கும் தித்வா புயல்… இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்
Heavy Rain Alert : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையை (Sri Lanka) ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு தித்வா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை, நவம்பர் 27 : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையை (Sri Lanka) ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக (Cyclone) வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் புயல் உருவாகியுள்ளதாகவும் இதற்கு தித்வா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவம்பர் 26, 2025 புதன்கிழமை காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது குறிப்பிடத்தக்கது. இது புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிந்திருந்தது. இந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 3 மணி நேரத்தில் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உருவாகிறது தித்வா புயல்
தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் என்றும், இது சென்னைக்கு 730 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயல் வருகிற நவம்பர் 30, 2025 அன்று தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியை நெருங்குமென தகவல் வெளியாகியுள்ளது. இந்த புயலுக்கு தித்வா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலை ஏமன் நாடு பரிந்துரைத்திருக்கிறது. இதற்கு அரபு மொழியில் தீவு என சொல்லப்படுகிறது.
இதையும் படிக்க : நவ.29 அன்று தமிழகத்தில் கொட்டித் தீர்க்க உள்ள கனமழை.. வெதர்மேன் எச்சரிக்கை!




திக்வா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி அருகே ஆந்திர கடல் பகுதியில் கரையை கடக்க உள்ள நிலையில் தமிழகத்துக்கு 29,30 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்
இந்த நிலையில் திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நவம்பர் 28, 2025 அன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், கடலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்.. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!
இதனைத் தொடர்ந்து விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நவம்பர் 29, 2025 அன்று அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆயா்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.