Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

23 வகையான தோட்டங்கள், 2000 ரோஜா வகைகள், விளையாட்டு திடல்.. அதிநவீன வசதிகளுடன் கோவையில் திறக்கப்பட்ட செம்மொழி பூங்கா..

Coimbatore Semmozhi Park: கோவை மாநகராட்சி காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத் தரத்துக்கான பூங்கா அமைப்பதற்காக 208.50 கோடி ரூபாய் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

23 வகையான தோட்டங்கள், 2000 ரோஜா வகைகள், விளையாட்டு திடல்.. அதிநவீன வசதிகளுடன் கோவையில் திறக்கப்பட்ட செம்மொழி பூங்கா..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Nov 2025 19:12 PM IST

கோவை, நவம்பர் 25, 2025: கோவை காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். கோவையில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர், செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

45 ஏக்கர் பரப்பளவில் திறக்கப்பட்ட பூங்கா:


அதன்படி, கோவை மாநகராட்சி காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத் தரத்துக்கான பூங்கா அமைப்பதற்காக 208.50 கோடி ரூபாய் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

இந்த செம்மொழிப் பூங்காவில் தாவரவியல் பூங்கா, சூரியத்தகடு சிற்பங்கள், பேட்டரியால் இயங்கும் வாகனங்கள், உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் பூங்காவிற்கு கொண்டுவரும் வசதி, பூங்கா வளாகத்தில் தரைத் தள வாகன நிறுத்தம், நிலத்தடி நீர் தொட்டி, மழைநீர் வடிகால், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு குழாய்கள், கூடுதல் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு, இன்று நவம்பர் 25, 2025 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

பூங்காவின் முக்கிய அம்சங்கள்

இந்த செம்மொழிப் பூங்காவில் உலக தரம் வாய்ந்த பல்வேறு சிறப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக:

  • செம்மொழி வனம்
  • மூலிகை தோட்டம்
  • மகரந்த தோட்டம்
  • நீர் தோட்டம்
  • மனங்கம்மல் தோட்டம்
  • பாலைவனத் தோட்டம்
  • மலர் தோட்டம்
  • மூங்கில் தோட்டம்
  • நட்சத்திரத் தோட்டம்
  • ரோஜா தோட்டம்
  • பசுமை வனம்

இவற்றை சேர்த்து 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்ற மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டுள்ளது. ரோஜா தோட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: 29 மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவு..

கட்டிட வசதிகள்:

  • நுழைவுச்சீட்டு வழங்கும் மையம்
  • அனுபவ மையக் கட்டிடம்
  • 500 நபர்கள் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம்
  • தோட்டத் தொழிலாளர்களுக்கான அறைகள்
  • உணவகம்
  • ஒப்பனை அறை
  • சில்லறை விற்பனை நிலையம்
  • செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில்

வாகன நிறுத்த வசதிகள்:

தரைத் தள வாகன நிறுத்துமிடத்தில், 453 கார்கள், 10 பேருந்துகள், 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் 2 கிலோமீட்டர் நீளத்துக்கு மழைநீர் சேகரிப்பு மற்றும் வடிகால் அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: யாருடன் கூட்டணி? டிச. 30 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் – பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டம்..

பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி வசதிகள்:

  • நடைப்பாதை மற்றும் உள்துறை சாலை
  • மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்களை விற்பனை செய்ய மதி அங்காடி
  • உலகத் தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம்
  • 4,000 சதுர அடியில் உள்வண மாதிரி காட்சி
  • 14,000 சதுர அடி பரப்பளவில் குழந்தைகள் விளையாட்டு இடம்
  • சிறுவர்களுக்கான உள் விளையாட்டு வசதி
  • மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக விளையாட்டு திடல்
  • தகவல் தொழில்நுட்ப வசதிகள்
  • மரங்கள் மற்றும் தாவரங்கள் பற்றிய தகவல்களுடன் கூடிய பெயர் பலகைகள்
  • QR குறியீடுகள் மற்றும் பார்கோடு வசதிகள்

சிறப்பு வசதிகள்

  • முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள்
  • மின்சார வாகனங்கள்
  • உணவகம்
  • ஒப்படை மையம்
  • பணியாளர்களுக்கான தங்குமிடம்
  • மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்
  • இரவில் ஜொலிக்கும் அலங்கார விளக்குகள்
  • நடைப்பாதையில் கால் வலி ஏற்படாத வகையில் மண் அடுக்குகள்
  • தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள்

உலகத் தரம் வாய்ந்த இந்த செம்மொழிப் பூங்கா, கோவை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.