Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நவ.29 அன்று தமிழகத்தில் கொட்டித் தீர்க்க உள்ள கனமழை.. வெதர்மேன் எச்சரிக்கை!

Heavy Rain Warning for Tamil Nadu From Nov 29 - 30 | இலங்கையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக உள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ள பட்சத்தில் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

நவ.29 அன்று தமிழகத்தில் கொட்டித் தீர்க்க உள்ள கனமழை.. வெதர்மேன் எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Nov 2025 10:39 AM IST

சென்னை, நவம்பர் 27 : இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக பெயரிடப்படும் வாய்ப்பு உள்ளதாகவும், அது சென்னை மற்றும் புதுச்சேரி கடற்கரைக்கு மிக அருகே வர வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அது சென்னைக்கு அருகே வருமா அல்லது திறந்தவெளி கடற்பகுதியில் நீடிக்குமா என்பது குறித்து காத்திருந்து தான் பாரக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில், அடுத்த சில நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து பிரதீப் ஜானின் கனிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

29 நவம்பர் மழை நிலவரம்

நவம்பர் 29, 2025 அன்று  நாகப்பட்டினம், திருவள்ளூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். இதேபோல, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், நாமக்கல், அரியலூர், கல்லக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கரையை கடந்த ‘சென்யார்’… உருவாகும் புதிய புயல்.. தமிழகத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை

29 முதல் 30 நவம்பர் வரை மழை நிலவரம்

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். இதேபோல திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். புயல் கரையை கடக்க தாமதமாகும் பட்சத்தில் இதில் சில மாற்றங்கள் ஏற்படும். ஒருவேளை புயல் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் பட்சத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என அவர் கூறியுள்ளார்.