Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவெகவில் இணையும் பாஜக முன்னாள் தலைவர் – வெளியான தகவல் – முழு விவரம் இதோ

TVK Vijay : தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவின் முக்கிய பிரமுகர் செங்கோட்டையன் இணையவுள்ள நிலையில், மேலும் ஒரு முக்கிய பிரமுகர் அக்கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநில முன்னாள் பாஜக தலைவர் சுவாமிநாதன் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெகவில் இணையும் பாஜக முன்னாள் தலைவர் – வெளியான தகவல் – முழு விவரம் இதோ
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Nov 2025 21:23 PM IST

அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் (K.A.Sengottaiyan) பாஜகவில் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செங்கோட்டையன் நவம்பர் 26, 2025 அன்று விஜய்யை அவரது பட்டினப்பாக்கம் இல்லத்தில் சந்தித்து பேசினார். கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நீண்டது. இதனையடுத்து கிட்டத்தட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது உறுதியாகியிருக்கிறது. தவெகவில் அவருக்கு என்ன பொறுப்பு கொடுப்பது என்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஜய் (Vijay) முன்னிலையில் நவம்பர் 27, 2025 அன்று செங்கோட்டையன் தவெகவில் இணையவிருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருடன் மேலும் ஒருவர் தவெகவில் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தவெகவில் இணையும் மேலும் ஒரு முக்கிய பிரமுகர்

தவெகவில் செங்கோட்டையன் இணையவிருக்கும் தகவல் அரசியல் அரங்கில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காரணம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 9 முறை போட்டியிட்டு தொடர்ந்து 9 முறையும் வெற்றி பெற்றிருக்கிறார். இது யாருமே செய்யாத சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் தவெகவில் இணைவது அவருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவரைத் தொடர்ந்து மேலும் ஒருவர் தவெகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்.. தவெகவில் இணைகிறாரா?

பாஜக மாநிலத் தலைவராக 8 ஆண்டுகளாக பணியாற்றிய சுவாமிநாதன்

புதுச்சேரியின் முன்னாள் பாஜக தலைவர் சுவாமிநாதனும் நவம்பர் 27, 2025 அன்று செங்கோட்டையனுடன் இணைந்து தவெகவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் பாஜக தலைவராக சுவாமிநாதன் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலத் தலைமை மாறும் நடைமுறை இருக்கும் நிலையில், நாட்டிலேயே அதிகபட்சமாக மாநிலத் தலைவராக 8 ஆண்டுகள் வரை பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ஆம் ஆண்டு வரை அவர் அக்கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்தார்.

இதையும் படிக்க : அதிமுகவை விட இரண்டரை மடங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 8, 2025 அன்று பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் அவர் தான் விலகியது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனவும்  தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் தான் அவர் தவெகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் ஒரே நாளில் இரண்டு முக்கிய தலைவர்கள் தவெகவில் இணையவிருப்பது அக்கட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் என அக்கட்சி தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.