Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

Sengottaiyan Resigned His MLA Post | தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கியுள்ளார்.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!
பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்
C Murugadoss
C Murugadoss | Updated On: 26 Nov 2025 12:09 PM IST

சென்னை, நவம்பர் 26 : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அவர் ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கியுள்ளார். இதனை அடுத்து செங்கோட்டையன் தனது அடுத்தக்கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

(தற்போது வந்த தகவலை வைத்து முதற்கட்ட செய்தி கொடுக்கப்பட்டுள்ளது . மேலதிக தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன)