Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை.. வெதர்மேன் வானிலை அலர்ட்!

Pradeep John Alert for Tamil Nadu on Ditwah Cyclone | திட்வா புயல் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் அடுத்த 24 மணி நேரத்துக்கான வானிலை அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை.. வெதர்மேன் வானிலை அலர்ட்!
கனமழை எச்சரிக்கை
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Nov 2025 10:47 AM IST

சென்னை, நவம்பர் 28 : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவம்பர் 27, 2025) வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாவு மண்டலமாக மாறியது. அது, வடக்கு – வடமேற்கு நிசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் திட்வா புயலாக மாறியது. இந்த புயல் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை நோக்கி நகரும் திட்வா புயல்

இலங்கை கடற்பகுதியில் உருவாகியுள்ள இந்த திட்வா புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (நவம்பர் 28, 2025) நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழகத்தை நோக்கி நகரும் திட்வா புயல்.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

தமிழ்நாடு வெதர்மேன் வானிலை அலர்ட்

திட்வா புயலின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வானிலை அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அடுத்த மணி நேரத்தில் தூத்துக்குடி கடற்கரை, ராமநாதபுரம் கடற்கடரை பகுதிகள், நாகப்பட்டினம், தஞ்சாவூர் தெற்கு பகுதிகள், புதுக்கோட்டை கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகள் மற்றும் திருவாரூர் மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தஞ்சாவூரில் பட்டப்பகலில் பள்ளி ஆசிரியர் படுகொலை – காதலன் வெறிச்செயல் – என்ன நடந்தது?

தமிழகத்தில் அதிக கனமழை மற்றும் அதிக தீவிர கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.