Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026 தொடங்கிய 4 நாட்களில் 3 அதிரடி அறிவிப்புகள்.. திமுக அரசின் மாஸ்டர் ஸ்கெட்ச்….

DMK's major announcements: அடுத்தடுத்த நாட்களில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களிடம் திமுக கடுமையாக ஸ்கோர் செய்து வருகிறது. இதேபோல், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கும் விரைவில் தீர்வு எட்டப்படும் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, செவிலியர்கள் போராட்டத்திற்கு இதேபோல் சுமூக தீர்வு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2026 தொடங்கிய 4 நாட்களில் 3 அதிரடி அறிவிப்புகள்.. திமுக அரசின் மாஸ்டர் ஸ்கெட்ச்….
முதல்வர் ஸ்டாலின்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 04 Jan 2026 14:08 PM IST

சென்னை, ஜனவரி 04: 2026 புத்தாண்டு தொடங்கி இன்றுடன் 4 நாட்கள் தான் ஆகியுள்ளது. அதற்குள் தமிழக அரசு அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் பரபரப்பாக பணியாற்றி வருகின்றன. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, கூட்டணியை இறுதி செய்வது என மும்மூரம் காட்டி வருகின்றன. மீண்டும் ஆட்சியை தக்க வைத்து விட வேண்டும் என்ற முனைப்பில் திமுகவும், இம்முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: “ஆசிரியர்களை கைவிடமாட்டோம்”.. போராட்டம் நியாமானது.. அமைச்சர் அன்பில் மகேஷ்!!

திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி தரும் தவெக:

அதேசமயம், இந்த தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில், விஜய்யின் அரசியல் வருகை அமைந்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியிலில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையொட்டி, 3 கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் மும்மூரமாக ஈடுபட்டுள்ளன.

அந்தவகையில், திமுக தரப்பில் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய கனிமொழி எம்.பி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் வகையில் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.

தேர்தல் அறிக்கை தயாரிப்புகளில் மும்மூரம்:

அதேபோல், அதிமுக தரப்பில் 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்திருந்தார். இந்த குழு தமிழகம் முழுவதும் 7-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து, 7ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிய உள்ளது.

டேப்ஸ் ஓய்வூதிய அறிவிப்பு:

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், 2026 புத்தாண்டு பிறந்தது முதல் திமுக அரசு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, மக்கள் மத்தியில் ஸ்கோர் செய்து வருகிறது. அந்தவகையில், நேற்றைய தினம் (ஜனவரி 3)  தமிழக அரசு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்ற டேப்ஸ் (TAPS) எனும் புதிய வகை ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் இந்த அறிவிப்பிற்கு பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதோடு, ஜனவரி 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்தை கைவிடுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

ரூ.3000 பொங்கல் பரிசு:

இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் (ஜனவரி 4) தமிழகத்தில் உள்ள 2.2 கோடி அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் ரொக்கப்பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  ஏற்கெனவே, 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகிய பரிசுத் தொகுப்புகள் குறித்த அறிவிப்பு மட்டும் வெளிவந்திருந்தது. இதனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு மட்டும்தானா? ரொக்கப் பணம் கிடையாதா? என்று விமர்சனம் எழுந்த நிலையில், இன்று ரூ.3,000 ரொக்க பரிசு அறிவிப்பு வெளியாகி தமிழக மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மாணவர்களுக்கு லேப்டாப்:

தொடர்ந்து, நாளைய தினம் (ஜனவரி 5) 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நாளை (ஜனவரி 5) சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அந்தவகையில், அரசு பொறியியல், கலை, அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்ட 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு முதற்கட்டமாக லேப்டாப் வழங்கப்பட உள்ளது. அதோடு, Dell, Acer, HP போன்ற பெரும் நிறுனங்களின் லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதையும் படிக்க: “திமுக செய்யும் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்”.. மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுரை!

இப்படி, அடுத்தடுத்த நாட்களில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களிடம் திமுக கடுமையாக ஸ்கோர் செய்து வருகிறது. இதேபோல், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கும் விரைவில் தீர்வு எட்டப்படும் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, செவிலியர்கள் போராட்டத்திற்கு இதேபோல் சுமூக தீர்வு எட்டப்பட்டது. அந்தவகையில், தங்கள் மீதான பழி குற்றச்சாட்டுகளை உடனுக்குடன்  திமுக துடைத்தெறிந்து வருகிறது.