டெல்லியில் நடந்த ஒரு சாதாரண ஏசி சர்வீஸ் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. டெல்லியை சேர்ந்த மேஹக் விதால் என்ற இளம் கலைஞர் மற்றும் டிஜிட்டல் கன்டெண்ட் கிரியேட்டர், தனது வீட்டில் உள்ள ஏர் கண்டிஷனரை சரிசெய்ய தொழில்நுட்ப நிபுணர்களை அழைத்திருந்தார். ஏசியை பரிசோதித்து கொண்டிருந்த இரண்டு தொழில்நுட்ப நிபுணர்களின் கவனம் திடீரென சுவர்களில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் மீது திரும்பியது.