சீன அரசுக்கு எதிராக நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்த மனித உரிமை ஆர்வலர் டாங் குவாங்பிங், நான்காவது முறையாக தப்பிச் செல்ல முயற்சி செய்து இறுதியாக தென் கொரியாவை அடைந்துள்ளார். 68 வயதான டாங் குவாங்பிங், சிறிய காற்று நிரப்பப்பட்ட படகில் 30 மணி நேரத்திற்கும் மேலாக கடலில் பயணம் செய்து தென் கொரியாவின் கரையை அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்ததற்காக பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த டாங், தனது குடும்பத்தினருடன் கனடாவில் மீண்டும் இணைய வேண்டும் என்ற கனவுடன் பலமுறை சீனாவை விட்டு வெளியேற முயன்றுள்ளார்.