ஜூன் 4ல் பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
தமிழகத்தில் 41 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக வெயில் தாக்கம் குறைந்துள்ளது. வெயில் தாக்கத்தால் ஒருவர் கூட தமிழகத்தில் இறக்கவில்லை . எனவே வரும் ஜூன் 4, 2026 ஆம் தேதி பள்ளி திறப்பில் எந்த தடையும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை, ஜூன் 4 : தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது எனவே வரும் 4 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் எந்த தடையும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மற்றும் அதனை ஒட்டிவுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். மூன்று இடங்களில் ரேடார் கருவிகள் மூலம் மழையின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுபாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டார். தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள அதிகாரிகள் உடன் அமைச்சர் செங்கோட்டையன் கேட்டறிந்தார்.
இதையும் படிக்க : கோவையில் திடீரென மோப்ப நாயுடன் களமிறங்கிய போலீஸ் படை.. ஆம்னி பேருந்துகள் சல்லடை சல்லடையாக அலசல்.. என்ன காரணம்!




அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தல் பேரில் நாள்தோறும் துறைவாரியாக துறை அமைச்சர்கள் தங்களது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் அடிப்படையில் அவரது கனவு தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒவ்வொரு துறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு பணிகளை தொடர்ந்து ஆற்றி வருகிறோம் என கூறினார்.
தென்மேற்கு பருவமழை காரணமாக இப்பொழுது அந்தமானில் ஒரு வார காலமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கேரளாவில் நேற்றைய தினம் முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இருக்கக்கூடிய நீலகிரி கொடைக்கானல் போன்ற பகுதிகளில் மழை எதிர் காலத்தில் எவ்வளவு வரப்போகிறது என்பதை ஆய்வு செய்வதற்கு நாள்தோறும் அதிகாரிகள் நியமித்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.
மூன்று இடங்களில் ரேடார் கருவிகள் மூலம் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. 24 மணி நேரமும் தயார் நிலையில் பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். பேரிடர் காலங்களில் விரைந்து பணியாற்ற பல்வேறு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட வாரியாக தயார் நிலையில் இருக்கிறார்கள் எனவும் மத்திய அரசு தேவையான உதவி செய்வதற்கு ஹெலிகாப்டர் மூலமாக பணிகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது எனவும் சீற்றங்கள் வரும்போது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாதுகாப்பாக மக்களுக்கு பணியாற்ற இந்த துறை வேகமாக விரைவாக பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க : தாயுமானவர் திட்டம்.. சென்னையில் 18 மண்டலங்களில் 2 நாட்களுக்கு வீடு தேடி பொருட்கள் விநியோகம்..
தென்மேற்கு பருவமழையை பொருத்தவரை இப்போதுதான் மழை தொடங்கி இருக்கிறது. தர்மபுரி போன்ற பகுதிகளில் 9 சென்டிமீட்டர் மழை பெய்து இருக்கிறது. எந்தவித சேதங்களும் இல்லை, மழையின் அளவை முன்கூட்டியே நம் கணிக்க முடியாது, பெய்யும் மழையின் அளவை கண்காணிக்க நாள்தோறும் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம் என்றார்.
ஜூன் 4ல் பள்ளிகள் திறக்கப்படுமா?
மழை அதிகம் பெய்யும் பகுதிகளை கவனித்து மின்சார துறையோடு கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக பணிகளை துறை அமைச்சரும் நானும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இருக்கிறோம் என கூறினார். வெப்ப நிலை குறைந்து இருக்கிறது எனவே 4 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு எந்த தடையும் இல்லை. வெப்பநிலை குறைந்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் 41 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக வெயில் தாக்கம் குறைந்துள்ளது. வெயில் தாக்கத்தால் ஒருவர் கூட தமிழகத்தில் இறக்கவில்லை எனவும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக தான் 1 ஆம் தேதி பள்ளி திறப்பு இருந்ததை 4 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது எனவே வரும் 4 ஆம் தேதி பள்ளி திறப்பில் எந்த தடையும் இல்லை என தெரிவித்தார்.