AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் போதைப்பொருள் விற்பனையை தட்டிக்கேட்ட 23 வயது இளைஞர்.. போதை கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..

Chennai Crime: சென்னை தண்டையார்பேட்டையில் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதனை தட்டிக் கேட்ட விஷ்ணு மீது போதை கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் போதைப்பொருள் விற்பனையை தட்டிக்கேட்ட 23 வயது இளைஞர்.. போதை கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Jun 2026 07:07 AM IST

சென்னை, ஜூன் 2, 2026: சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட விவகாரத்தில், விஷ்ணு என்ற 23 வயது இளைஞர் மீது கத்தி, அம்மிக்கல், பீர் பாட்டில் ஆகியவற்றால் தாக்குதல் நடத்தி, போதை கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பருக்கு துணையாக சென்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம்:

தமிழகத்தில் போதை கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதை கலாச்சாரத்தால் பல்வேறு குற்றச் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணம் உள்ளன. தமிழகத்தில் கடந்த மாதம் புதிய அரசு பொறுப்பேற்றபோது, போதைப் பொருட்களின் பயன்பாடு அறவே குறைக்கப்படும், போதைப் பொருள் விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் குற்றங்களுக்கு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். ஆனால் தற்போது வரை போதைப் பொருள் பயன்பாடு குறையாமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதன் காரணமாக குற்றச் சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், சென்னையில் 23 வயது இளைஞர் ஒருவர் போதைப் பொருள் விற்பனையை தட்டிக் கேட்டதற்காக போதை கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை:

சென்னை தண்டையார்பேட்டையில் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதனை தட்டிக் கேட்ட விஷ்ணு மீது போதை கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் படிக்க: தஞ்சாவூரில் கணவன் – மனைவி இடையே கத்திச் சண்டை.. நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கரம்.. இறுதியில் பறிபோன உயிர்!

குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் மெத்தனம் காட்டுவதாக உயிரிழந்த விஷ்ணுவின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், விஷ்ணுவின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் புகார் அளித்துள்ளனர். அச்சுறுத்தல் குறித்து தகவல் தெரிவிக்க காவல்துறையை தொடர்பு கொண்டபோதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.

கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow Us