AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தஞ்சாவூரில் கணவன் – மனைவி இடையே கத்திச் சண்டை.. நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கரம்.. இறுதியில் பறிபோன உயிர்!

Thanjavur Women Murder: தஞ்சாவூரில் நகை திருட்டு வழக்கில் போலீசாரிடம் சிக்கியது தொடர்பாக கணவன், மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரும் கத்தியால் சண்டை போட்டதில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூரில் கணவன் – மனைவி இடையே கத்திச் சண்டை.. நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கரம்.. இறுதியில் பறிபோன உயிர்!
கோப்புப்படம் Image Source: social media
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 02 Jun 2026 07:03 AM IST

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55 வயது). இவரது மனைவி விஜயா ( 50 வயது). இவர், கடந்த 2025- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் உள்ள வீட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான அனந்த பத்மநாபன் மூலமாக மாடம்பாக்கம் பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு, விஜயா வேலை பார்த்து வந்த நிலையில் ஒரு வாரத்தில் 35 பவுன் நகைகளை திருடிக் கொண்டு அங்கிருந்து தலைமறைவானார். இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயாவை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த மே 29- க ஆம் தேதி மேல்மருவத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த விஜயா மற்றும் அவரது கணவர் பன்னீர்செல்வம் ஆகியவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதை தொடர்ந்து, இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கணவன் – மனைவி இடையே கத்திச் சண்டை

பின்னர், அனந்த பத்ம நாபனிடம் தங்கள் பாதுகாப்பில் இருவரையும் தங்க வைத்துக் கொள்ளுமாறு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி மேற்கு மாம்பலத்தில் உள்ள தனி அறையில் விஜயா மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் தங்கி இருந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு திடீரென கணவன் மனைவியிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டவுடன் ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். பின்னர், ஒரு கட்டத்தில் விஜயா மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் கத்தியால் ஒருவரை ஒருவர் சரமாரியாக குத்தி கத்தி சண்டை போட்டுள்ளனர்.

மேலும் படிக்க: பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம்.. ஜூன் 5 ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு – அமைச்சர் விஸ்வநாதன்..

ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பலியான மனைவி

இதில், பன்னீர்செல்வம் சரமாரியாக கத்தியால் குத்தியதில் விஜயா பலத்த வெட்டு காயத்துடன் இரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதே போல, விஜயா கத்தியால் குத்தியதில் பன்னீர் செல்வத்திற்கு கழுத்து உட்பட பல்வேறு இடங்களில் கத்தி குத்து விழுந்தது. அத்துடன் உயிருக்கு போராடி வந்தார். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மற்றும் பத்மநாபன் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை

இது குறித்து அசோக் நகர் காவல் நிலையத்திற்கு பத்மநாபன் தகவல் தெரிவித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய பன்னீர்செல்வத்தை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. நகை திருட்டு வழக்கில் போலீசாரிடம் சிக்கியது தொடர்பாக நிகழ்ந்த வாக்குவாதத்தில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரிய வந்தது.

மேலும் படிக்க: கோவையில் சடலமாக மீட்கப்பட்ட மேற்கு வங்க நபர்.. பகீர் சம்பவம்!

Follow Us