AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்குமா? ஆர். எஸ். பாரதி கூறுவதென்ன!

Constituency Delimitation Bill DMK Stance: நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ள தொகுதி மறுரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்பது குறித்த விளக்கத்தை அந்தக் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ் .பாரதி தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்குமா? ஆர். எஸ். பாரதி கூறுவதென்ன!
ஆர்.எஸ்.பாரதி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 17 Jul 2026 21:42 PM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 18- ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்வதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாவே, திமுக ஆதரவை பாஜக அரசு கோரும் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறியதாவது: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ள முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரை மசோதாவின் திருத்தப்பட்ட வரைவை பார்த்த பிறகு தான் தொகுதி மறுவரையறை பிரச்சனை குறித்து திமுக முடிவு எடுக்கும்.

தொகுதி மறுவரையறை மசோதாவின் உள்ளடக்கம்

ஏற்கனவே தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடித்துள்ளோம். எனவே, மீண்டும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால், அதன் உள்ளடக்கத்தை நாங்கள் பரிசீலனை செய்வோம். அது தமிழ்நாடு உள்பட தென்னிந்திய மாநிலங்களின் நலன்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் அதனை எதிர்க்கும். நாங்கள் ஏற்கனவே அளித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு சேர்த்திருந்தால், திராவிட முன்னேற்றக் கழகம் அதை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் படிக்க: 2 பெரும் தவறுகளை செய்து விட்டேன்.. அதிமுக-திமுகவை குறிப்பிட்டு வைகோ விமர்சனம்!

தமிழக உரிமைகளுக்கு திமுக துணை நிற்கும்

தமிழக உரிமைகளுக்கான தனது போராட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் உறுதியாக இருக்கும். திராவிட முன்னேற்ற கழகம் அளித்துள்ள பரிந்துரை மாற்றங்கள் தொகுதி மறு வரையறை மசோதாவில் சேர்க்கப்பட்டால் பாரதிய ஜனதா கட்சி தனது நிலைப்பாட்டை தளர்த்தி உள்ளது என்று அர்த்தம் என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சென்னைக்கு வருகை தந்திருந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் கூறுகையில், தொகுதி மறு வரையறை மசோதாவை மீண்டும் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளது.

திமுக ஆதரவை பாஜக கோரும்

இதற்காக திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் 20 பேரின் ஆதரவுடன் சேர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்பிக்கள் ஆதரவையும் பாஜக அரசு கோரும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இவரது கருத்து பதில் அளிக்கும் விதமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி திமுகவின் நிலைப்பாட்டை முன் வைத்துள்ளார். இதில், தொகுதி மறுவரையறை மசோதா எப்படி நிறைவேறும் என்பது தெரியவரும்.

மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு.. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சார் பதிவாளர்.. நீதிமன்றம் விதித்த அதிரடி நிபந்தனை!

Follow Us