AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவையில் சடலமாக மீட்கப்பட்ட மேற்கு வங்க நபர்.. பகீர் சம்பவம்!

West Bengal Man Found Dead and Decomposed | கோயம்புத்தூரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உடலை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் சடலமாக மீட்கப்பட்ட மேற்கு வங்க நபர்.. பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Jun 2026 22:18 PM IST

பள்ளவாரி, ஜூன் 01 : கோயம்புத்தூரில் (Coimbatore) மேற்கு வங்கத்தை (West Bengal) சேர்ந்தவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சடலமாக மீட்கப்பட்ட பகீர் சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கொலை – அதிர்ச்சி சம்பவம்

கோயம்புத்தூர் மாவட்டம், காரமத்தூர் அருகே உள்ள பள்ளவாரி ஓடையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மஜிபுல் மொண்டல்  என்ற 37 வயது நபரின் சடலம் கிடைந்துள்ளது. அதனௌ கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளான பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : தற்குறி என சொன்னவர்கள் தான் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றியுள்ளனர் – திருச்சியில் முதல்வர் விஜய் பேச்சு

அடையாள அட்டைகள் மூலம் உறுதி செய்யப்பட்ட அடையாளம்

முன்னதாக நடைபெற்ற தடய அறிவியல் துறை ஆய்வில், அவரின் ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் அடையாள அட்டையின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரின் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லாததால், மரணத்திற்கான காரணம் உடற்கூராய்வு அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்.. சால்வை அணிவித்து வரவேற்ற எம்.பி துரை வைகோ

தொடர் விசாரணை மேற்கொள்ளும் போலீசார்

சடலம் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆலாந்துறை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் எதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us