திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்.. சால்வை அணிவித்து வரவேற்ற எம்.பி துரை வைகோ..
திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ சால்வை அணிவித்து வரவேற்றார். அதேபோல், அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதர்ஷனா ரமேஷ், துணை சபாநாயகர் உள்ளிட்டோரும் முதலமைச்சரை வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தனது வாகனத்தின் மூலம் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெறவுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார்.
திருச்சி, ஜூன் 1, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திருச்சிக்கு வருகை தந்த நிலையில், மதிமுக எம்.பி. துரை வைகோ சால்வை அணிவித்து வரவேற்றார். தமிழக வெற்றிக்கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய், திருச்சியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் களம் இறங்கினார்.
இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, மே 10ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி:
இந்த சூழலில், தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு சென்றடைந்தார்.
மேலும் படிக்க: அதிமுக பிளவால் மனம் பொறுக்கவில்லை.. உலகை விட்டே போகிறேன்.. தஞ்சாவூர் நிர்வாகி தீக்குளித்த தற்கொலை!
திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு அங்கு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்ட சூழலில், அதனை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார்.
முதல்வர் விஜயை வரவேற்ற எம்.பி துரை வைகோ:
இந்த நிலையில், திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ சால்வை அணிவித்து வரவேற்றார். அதேபோல், அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதர்ஷனா ரமேஷ், துணை சபாநாயகர் உள்ளிட்டோரும் முதலமைச்சரை வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தனது வாகனத்தின் மூலம் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெறவுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார்.
மேலும் படிக்க: கோடை விடுமுறை நிறைவு.. கோவை விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!
செயின்ட் ஜோசப் கல்லூரியில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், பிரச்சார வாகனத்தில் அவர் இன்று மக்களிடையே உரையாற்ற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.