AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

225- ஆவது முறை மனு தாக்கல்.. ராஜ்யசபா இடைத்தேர்தலில் மீண்டும் களமிறங்கிய தேர்தல் மன்னன்!

Election King Padmarajan: தமிழகத்துக்கான ராஜ்ய சபா இடைத் தேர்தலில் சேலத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் என்பவர் 255- ஆவது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதுவைர ரூ.1 கோடி செலவு செய்துள்ளதாக கூறி உள்ளார்.

225- ஆவது முறை மனு தாக்கல்.. ராஜ்யசபா இடைத்தேர்தலில் மீண்டும் களமிறங்கிய தேர்தல் மன்னன்!
தேர்தல் மன்னன் கே. பத்மராஜன்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 02 Jun 2026 06:32 AM IST

தமிழகத்தில் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக இருந்து வந்த சி. வி. சண்முகம் தமிழக சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால், ராஜ்ய சபாவில் தமிழகத்துக்கான ஒரு எம்பி பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, அந்த பதவிக்கான வேட்பு மனு தாக்கல் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று திங்கள்கிழமை ( ஜூன் 1- ஆம் தேதி) தொடங்கியது. இதில், தமிழகத்தின் தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்ம ராஜன் என்பவர் தேர்தல் அதிகாரி தேன்மொழியிடம் சுயேட்சையாக போட்டியிடுவதாக முதல் நபராக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இவர், தமிழக சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், மாநிலங்களவை, மக்களவை மற்றும் குடியரசு தலைவர் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் சுயேச்சையாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து போட்டியிட்டுள்ளார்.

225- ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல்

ஆனால், எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றது கிடையாது. இவ்வளவு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்கையில், அதற்கான டெபாசிட் தொகையாக தற்போது வரை சுமார் ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளதாக தேர்தல் மன்னன் பத்மராஜன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பாக தேர்தல் மன்னன் பத்ம ராஜன் கூறுகையில், தற்போது 225- ஆவது முறையாக டெல்லி ராஜ்யசபா எம்பி பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.

மேலும் படிக்க: நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? அதிமுக ஐ.டி விங்..

1988- ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டி

கடந்த 1988- ஆம் ஆண்டு முதல் முதலாக தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய தொடங்கினேன். தற்போது வரை தேர்தல் டெபாசிட் தொகையாக ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளேன். என்னை போல வேறு எவரும் வேட்பு மனுவை தாக்கல் செய்ய முன் வருவது கிடையாது. இவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவே ஒவ்வொரு முறையும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து வருகிறேன் என்று தெரிவித்தார்.

ஜூன் 18- ஆம் தேதி இடைத் தேர்தல் முடிவுகள்

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு ஜூன் 1- ஆம் தேதி தொடங்கி ஜூன் 8- ஆம் தேதி வரை வேட்ப மனு தாக்கல் செய்யலாம். ஜூன் 9- ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. ஜூன் 11- ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஆகும். ஒருவருக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஜூன் 18- ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அன்று மாலை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

மேலும் படிக்க: BLACK & WHITE கோட் சூட் ஏன் போடுகிறேன்.. விளக்கம் அளித்த முதல்வர் விஜய்..

Follow Us