AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

BLACK & WHITE கோட் சூட் ஏன் போடுகிறேன்.. விளக்கம் அளித்த முதல்வர் விஜய்..

தமிழ்நாடு முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். வழக்கமாக ஒவ்வொரு முதலமைச்சரும் வேட்டி-சட்டை அல்லது பேண்ட்-சட்டை அணிவது வழக்கம். ஆனால், தற்போதைய முதல்வர் விஜய் புதிதாக கோட், சூட் அணிந்து தலைமைச் செயலகத்திற்கு சென்று வருகிறார்.

BLACK & WHITE கோட் சூட் ஏன் போடுகிறேன்.. விளக்கம் அளித்த முதல்வர் விஜய்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 01 Jun 2026 22:40 PM IST

ஜூன் 1, 2026: “நாங்க ஏன் கோட், சூட் போடக்கூடாதா?” என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தான் ஏன் கோட், சூட் அணிகிறார் என்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் விஜய், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “யார் எந்த நிலைமைக்கு, எந்த பொசிஷனுக்கு சென்றாலும் கிண்டலும் கேலியும் பேசுவது இருக்கத்தான் செய்யும். நம்மைப் பற்றி, நம்ம அரசியலைப் பற்றி, நம்முடைய பேச்சைப் பற்றி கிண்டல் செய்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் கூற வேண்டுகோள் — தயவு செய்து அதை நிறுத்திவிடாதீர்கள். நீங்கள்தான் என்னுடைய எனர்ஜி ஃபோர்ஸ்.

ஏன் கோட் சூட் போடுகிறேன் – விளக்கம் அளித்த முதல்வர் விஜய்:

புதுசா நாங்க கோட், சூட் எல்லாம் போட்டு வர்றோம்ல, அதைப் பற்றிக்கூட நிறைய பேர் பேசுறாங்க. ஏன், நாங்கள் எல்லாம் கோட், சூட் போடக்கூடாதா? அதிகாரம் செய்பவர்களுக்கும், ஆதிக்கம் செய்பவர்களுக்கும் மட்டும் தான் கோட், சூட் போடணுமா?

மேலும் படிக்க: நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? அதிமுக ஐ.டி விங்..

தினசரி நான் கலர் கலராக கோட், சூட் போடுகிறேனா? ரெண்டே நிறம் தான் — கருப்பு மற்றும் வெள்ளை. எல்லா இடத்திலும் இந்த விஜய் பிளாக் அண்ட் வைட்டாகத்தான் இருப்பேன். அந்த பிளாக் கூட எதைக் குறிக்கும், யாரைக் குறிக்கும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்” என பேசியிருந்தார்.

எந்த முதல்வரும் செய்யாத செயல்:

தமிழ்நாடு முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். வழக்கமாக ஒவ்வொரு முதலமைச்சரும் வேட்டி-சட்டை அல்லது பேண்ட்-சட்டை அணிவது வழக்கம். ஆனால், தற்போதைய முதல்வர் விஜய் புதிதாக கோட், சூட் அணிந்து தலைமைச் செயலகத்திற்கு சென்று வருகிறார்.

நிர்வாகப் பணிகள், ஆலோசனைக் கூட்டங்கள் என எல்லா இடங்களிலும் அதே கோட், சூட்டில்தான் அவர் தோன்றுகிறார். இது பலரின் கவனத்தை ஈர்த்தது. “ஏன் இந்த கோட், சூட்?” என்று பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்த சூழலில், இன்று அதற்கான விளக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கூறியுள்ளார்.

Follow Us