பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்.. நெல்லை சரக டிஐஜி உத்தரவு!
Arumuganeri Inspector Thileepan suspend : தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் திலீபன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தூநெல்லை சரக டி.ஐ.ஜி. தேஷ்முக் சேகர் சஞ்சய் பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் திலீபன். இந்த காவல் நிலையத்தில் ஆண் காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் என சுமார் 66 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 6 பெண் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், ஒரு பெண் காவலருக்கு அவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு இன்ஸ்பெக்டர் திலீபன் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை அந்த பெண் காவலர் பார்த்த உடனேயே, இன்ஸ்பெக்டர் திலீபன் அந்த மெசேஜை அழித்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக, அந்த பெண் காவலர் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் திலீபன் நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதே போல, அந்த பெண் காவலர் சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
பெண் காவலரின் கணவரை துப்பாக்கியால் மிரட்டல்
ஆனால், அந்தப் பெண் காவலரை ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இருந்து, இன்ஸ்பெக்டர் திலீபன் விடுவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, தனது கணவரிடம் அந்த பெண் காவலர் தெரிவித்துள்ளார். இதனை, திலீப்பனிடம், காவலரின் கணவர் தட்டி கேட்டு உள்ளார். அப்போது, ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் அவரது நெஞ்சில் வைத்து சுட்டு விடுவதாக மிரட்டல் விடுக்கம் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.




மேலும் படிக்க: பெண்கள் பாதுகாப்பு.. தமிழக காவல் துறையில் கூட்டு நடவடிக்கை குழு அமைப்பு.. குற்றவாளிகளுக்கு கடிவாளம்!
இன்ஸ்பெக்டர் திலீபன் அதிரடி சஸ்பெண்ட்
இந்த சம்பவங்கள் தொடர்பாக அந்த பெண் காவலர் நெல்லை சரக டிஐஜி தேஷ்முக் சேகர் சஞ்சய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொள்ளுமாறு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் திலீபன் பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில், இதில், பெண் காவலருக்கு திலீபன் பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் திலீபனை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டி. ஐ. ஜி. தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டார்.
View this post on Instagram
கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்த இன்ஸ்பெக்டர்
இந்த நிலையில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை எனவும், என்னுடன் பணி புரியும் பெண் காவலர்களை தவறான எண்ணத்தில் பார்த்ததில்லை எனவும் இன்ஸ்பெக்டர் திலீபன் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், பாலியல் புகாரில் எனது பெயர் விடுபடவில்லை எனில் அடுத்த 7 நாட்களுக்குள் எனது பணியை ராஜினாமா செய்வேன் என்று வருத்தத்துடன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அண்ணாமலை விரைவில் டெல்லி பயணம்? பாஜக தலைமையுடன் முக்கிய ஆலோசனை!