AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம்.. ஜூன் 5 ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு – அமைச்சர் விஸ்வநாதன்..

கடந்த 2025ஆம் ஆண்டில் மொத்தமாக 2,33,417 கலைக் கல்லூரி விண்ணப்பங்கள் பதிவாகியிருந்ததாகவும், 2026ஆம் ஆண்டில் 2,31,274 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதேபோல், 2025ஆம் ஆண்டில் 1,87,310 பேர் கட்டணம் செலுத்தியிருந்ததாகவும், 2026ஆம் ஆண்டில் 1,79,675 பேர் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் கூறினார்.

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம்.. ஜூன் 5 ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு – அமைச்சர் விஸ்வநாதன்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 Jun 2026 21:11 PM IST

ஜூன் 1, 2026: உயர்கல்வித்துறை வெளிப்படைத்தன்மையுடன், கையூட்டு பெறாத வகையில் செயல்படும் என அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருடன் ஆலோசனை நடைபெற்ற பின்பு துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார். பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி ஆணையரகத்தில், அரசு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

சிபிஎஸ்சி தரப்பில் கோரிக்கை வரவில்லை:

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், “தகுதியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பை கட்டாயம் வழங்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும்” என கூறினார்.

மேலும், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மதிப்பெண் மதிப்பீடு விவகாரம் குறித்த கேள்விக்கு, “சிபிஎஸ்இ தரப்பில் எங்களிடம் எந்த கோரிக்கையும் வரவில்லை” என அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்தார்.

மேலும் படிக்க: பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை? புதிய கட்சி தொடங்குகிறாரா? அண்ணாமலை சொன்ன பதில்..

பொறியியல் கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு ஜூன் 29ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்த அமைச்சர், “அமைச்சராக பொறுப்பேற்று குறுகிய காலம்தான் ஆகி இருக்கிறது. முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து வெகு விரைவில் துணைவேந்தர் நியமனம் நடைபெறும்” என்றும் கூறினார்.

பல்கலைக்கழகங்களின் நிதிப் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு, “இன்னும் ஒரு அல்லது இரண்டு நாட்களில் முதலமைச்சரை சந்திக்கப் போகிறேன். இதுகுறித்து விவாதிக்க உள்ளேன்” என்றார்.

கல்லூரி சீட்டுக்காக இனி பணம் வாங்குவது நடக்காது:

தொடர்ந்து பேசிய அமைச்சர், “கல்லூரிகளில் சீட்டுக்காக பணம் வாங்குவது இனி நடக்காது. உயர்கல்வித்துறை வெளிப்படையான துறையாக செயல்படும். லஞ்சம் இல்லாத துறையாக செயல்படும். அந்த நம்பிக்கையை நான் உங்களுக்கு கொடுக்கிறேன்” என தெரிவித்தார்.

‘நான் முதல்வன்’ திட்டம் குறித்த கேள்விக்கு, “எங்கள் அரசு அதைவிட ராக்கெட் வேகத்தில் வேலைவாய்ப்பு விஷயத்தில் கவனம் செலுத்தும். எங்களுக்கென்று புதிய திட்டங்கள் நிறைய உள்ளன. அவற்றை செயல்படுத்துவோம்” என அமைச்சர் பதிலளித்தார்.

கடந்த 2025ஆம் ஆண்டில் மொத்தமாக 2,33,417 கலைக் கல்லூரி விண்ணப்பங்கள் பதிவாகியிருந்ததாகவும், 2026ஆம் ஆண்டில் 2,31,274 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதேபோல், 2025ஆம் ஆண்டில் 1,87,310 பேர் கட்டணம் செலுத்தியிருந்ததாகவும், 2026ஆம் ஆண்டில் 1,79,675 பேர் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், “தமிழகம் சார்ந்த உயர்கல்வித்துறையின் முடிவுகள் அனைத்தும் தமிழக மக்களுக்கு சாதகமாகவும், தமிழக மக்களின் உணர்வு சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆதரவாகவும், தமிழக அரசின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் இருக்கும். மாநில உரிமைகளை எந்த காலத்திலும் இந்த அரசு விட்டுக் கொடுக்காது” என்றும் பேசினார்.

அதுமட்டுமின்றி, “மாநில சுயாட்சி என்பது எங்கள் முதலமைச்சருக்கு மிகவும் முக்கியமானது. தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

“கடந்த ஆட்சியில் மாநில முதலமைச்சரிடம் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் வேண்டும் என கொள்கை முன்வைக்கப்பட்ட நிலையில், உங்கள் கொள்கை என்ன?” என்ற கேள்விக்கு, “மாநில சுயாட்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்தார்.

Follow Us