இந்தியாவின் பணக்கார சிஎம்.. முதல் 3 இடத்தில் யார் தெரியுமா? விஜய்க்கு எந்த இடம்?
Richest CM In India: இந்தியாவில் பணக்கார முதல்வர்களில் முதல் 3 இடங்களில் எந்த மாநில முதல்வர்கள் உள்ளனர். அதில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் எந்த இடத்தில் உள்ளார் என்பது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பணக்கார முதல்வர்கள் பட்டியலில் தென்னிந்தியாவை சேர்ந்த முதல்வரகளே பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதன்படி, 2026- ஆம் ஆண்டில் பணக்கார முதல் அமைச்சர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை எந்த முதல்வர் பிடித்துள்ளார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக இருந்து வந்த சித்த ராமையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவருக்கு பதிலாக துணை முதல் அமைச்சர் பதவியில் இருந்த டி. கே. சிவக்குமார் வருகிற ஜூன் 3- ஆம் தேதி ( புதன்கிழமை) முதல் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், இந்தியாவில் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் முதலிடத்தில் டி. கே. சிவக்குமார் உள்ளார். இவர், சட்டமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் ரூ.1,413 கோடி சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், பணக்கார முதல்வர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய்க்கு எந்த இடம் தெரியுமா
இவருக்கு அடுத்தபடியாக, ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு 2- ஆவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.931 கோடி ஆகும். இவருக்கு அடுத்தபடியாக 3- ஆவது இடத்தில் தமிழக முதல் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் உள்ளார். இவர், தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.648 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்.. நெல்லை சரக டிஐஜி உத்தரவு!




பணக்கார முதல்வர் பட்டியலில் கடைசி இடத்தில்…
இந்த பட்டியலில் ஜம்மு காஷ்மீர் முதல் அமைச்சர் ஓமர் அப்துல்லா ரூ.55 லட்சம் சொத்து மதிப்புடன் கடைசி இடத்தை பிடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் அமைச்சர் பஜன் லால் சர்மா மற்றும் ஒடிசா முதல் அமைச்சர் சரண் மாஜி ஆகியோர் ரூ.1 கோடி சொத்துக்கள் மதிப்புடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்தியாவில் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களையும் தென் இந்திய மாநிலங்களான கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்களே பிடித்துள்ளனர்.
பிரமான பத்திரத்தின் அடிப்படையில் தகவல்
மேற்கண்ட தகவல்கள் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் போது முதல்வர் வேட்பாளராக குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடும் போது அவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே, மூன்று மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
மேலும் படிக்க: அதிமுக பிளவால் மனம் பொறுக்கவில்லை.. உலகை விட்டே போகிறேன்.. தஞ்சாவூர் நிர்வாகி தீக்குளித்த தற்கொலை!