AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்.. ஆழ்கடல் பயணத்துக்கு தயாராகும் படகுகள்.. பராமரிப்பு பணிகளில் மீனவர்கள் மும்முரம்!

Fishermen Repairing Boats: மீன்பிட தடைக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளை வர்ணம் தீட்டி சீரமைத்து வருகின்றனர். இவர்கள் ஜூன் 14- ஆம் தேதி முதல் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்.. ஆழ்கடல் பயணத்துக்கு தயாராகும் படகுகள்.. பராமரிப்பு பணிகளில் மீனவர்கள் மும்முரம்!
கோப்புப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Jun 2026 09:26 AM IST

தமிழக கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் வகையிலும் தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் ஏப்ரல் மாதம் 15- ஆம் தேதி முதல் மே 30- ஆம் தேதி வரை சுமார் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 1983- ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் இந்த தடைக்காலம் ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது மீன்பிடி தடை காலம் 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15- ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற ஜூன் 14- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த தடை காலத்தில் மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். இதன் காரணமாக ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகு மற்றும் இழுவலை படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது.

மீன்பிடி தடைக்கால நிவாரணம்

ஆனால், கரைப்பகுதியில் சிறிது தொலைவு வரை படகில் சென்று மீன்கள் பிடித்து வரும் மீனவர்கள் தங்களது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு பெரிதாக வேலை எதுவும் இருக்காது. இதன் காரணமாக அரசு சார்பில் மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க: மதுரையில் அதிர்ச்சி சம்பவம்.. காட்டுப்பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. 4 சிறுவர்கள் கைது!

மீன்பிடி படகுகளை தயார் செய்யும் பணியில் மீனவர்கள்

அதன்படி, மீனவர்கள் தங்களது படகுகளை கடற்கரை பகுதிகளில் நிறுத்தி வைத்து அதற்கு வர்ணம் தீட்டுவது, படகில் உள்ள இரும்பு கம்பிகளில் ஏற்பட்டுள்ள அரிப்புகளை வெல்டிங் செய்து சரி செய்வது, படகில் உள்ளே அமைக்கப்பட்டுள்ள பலகைகளை சீரமைப்பது மற்றும் உயிர்காக்கும் கருவிகள் உள்ளிட்டவற்றை பேணுவது உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், தங்களது மீன்பிடி படகுகளை முழுமையாக தயார் செய்து ஜூன் 15- ஆம் தேதி முதல் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல உள்ளனர்.

ஒரு வாரம் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடி தொழில்

அவ்வாறு செல்லும் மீனவர்கள் ஆழ் கடலில் சுமார் ஒரு வாரம் தங்கி இருந்து மீன்களைப் பிடித்துக் கொண்டு கரை திரும்புவார்கள். அவ்வாறு பிடிக்கப்படும் மீன்களை ஐஸ் கட்டிகளில் வைத்து பதப்படுத்துவார்கள். இதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெறும். ஆனால், விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாத காரணத்தால் ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: சேலம் சிறையில் விசாரணை கைதி மர்ம சாவு… வார்டர் மீது பாய்ந்த கடும் நடவடிக்கை.. ஆன் ஸ்பாட்டில் நீதிபதி ரைடு!

Follow Us