AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆன்லைன் பண மோசடியா? மின்-பூஜ்ஜிய எப்ஐஆர் அறிமுகம்.. தமிழக அரசு அதிரடி!

Zero FIR System : தமிழகத்தில் இணையவழி நிதி மோசடி குற்றம் தொடர்பாக மின் பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குமர் மகேஷ்குமார் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார் .

ஆன்லைன் பண மோசடியா? மின்-பூஜ்ஜிய எப்ஐஆர் அறிமுகம்.. தமிழக அரசு அதிரடி!
டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 18 Jul 2026 19:36 PM IST

தமிழகத்தில் இணைய வழி நிதி மோசடி சம்பவத்தில் மின்னணு பூஜ்ஜிய எஃப் ஐ ஆர் பதிவு செய்யும் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக, காவல்துறை தலைமை இயக்குனர் மகேஷ் குமார் அகர்வால் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இணைய வழி நிதி மோசடி தொடர்பான புகார்களை விரைவாக பதிவு செய்து விசாரணை செய்யும் வகையில் இணைய குற்ற புகார் தேசிய உதவி எண் 1930- இல் பெறப்படும் புகார்களுக்கு மின்- பூஜ்ஜிய எஃப் ஐ ஆர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1930 உதவி எண் மூலம் பெறப்படும் ரூ.1 லட்சத்துக்கும் மேற்பட்ட இணையவழி நிதி மோசடி புகார்கள், குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வளைய அமைப்புடன் தானாகவே ஒருங்கிணைக்கப்பட்டு மின்- பூஜ்ஜிய எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படும். இதில், பாதிக்கப்பட்ட நபருக்கு நாம் அளித்த இணைய வழி குற்றப் புகாரின் அடிப்படையில் மின்- பூஜ்ஜியம் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மின் பூஜ்ஜிய எப்ஐஆர் செயல்படும் விதம்

மேலும், தேவையான நடவடிக்கைகளுக்காக குறிப்பிடப்பட்டுள்ள இணைய வழி குற்ற காவல் நிலையத்தில் 3 நாட்களுக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று எஸ்எம்எஸ் வாயிலாக தகவல் அனுப்பப்படும். இதை தொடர்ந்து, மின்- பூஜ்ஜியம் எஃப் ஐ ஆர் மின்னணு முறையில் சம்பந்தப்பட்ட அதிகார வரம்பு உட்பட்ட இணைய வழி குற்ற தடுப்பு காவல் நிலைய விசாரணைக்கு அனுப்பப்படும். பின்னர், அதிகார வரம்பின் அடிப்படையில் வழக்கமான எஃப் ஐ ஆர்- ஆக மாற்றம் செய்யப்படும்.

மேலும் படிக்க: சிவகங்கையில் தாசில்தார் வீட்டுக்கு குறி.. 50 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம கும்பல்.. போலீஸ் வலைவீச்சு!

3 நாள்களுக்குள் புகாரை உறுதி செய்ய வேண்டும்

பாரதிய நாகரிக் சுரஷா சன்ஹிதா 2023- இன் விதிகளின்படி மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்ட புகாரை உறுதிப்படுத்தி வழக்கு பதிவை நிறைவு செய்ய புகார்தாரர் 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நேரில் சென்று தனது புகாரை உறுதி செய்ய வேண்டும். இந்த பிரிவு கைது செய்யத்தக்க குற்றங்கள் தொடர்பான தகவல்களை மின்னணு முறையில் அளிக்க அனுமதிப்பதுடன், அதிகார வரம்பை பொருட்படுத்தாமல் மின்- பூஜ்ஜிய எஃப் ஐ ஆர் பதிவு செய்யவும் வழி வகுக்கிறது.

சிசிடிஎன்எஸ் அடிப்படையில்

இதன் மூலம் அதிகார வரம்பு தீர்மானிக்கப்படுவதால் சட்ட நடவடிக்கை தாமதம் இன்றி உடனடியாக தொடங்கப்படும். 1930- உதவி எண் மற்றும் சிசிடிஎன்எஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மூலமாக ஒரே தகவலை மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி.. சிவகங்கையில் கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரிகள்!

Follow Us