AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் நேற்று ஆய்வு… இன்று அதிரடி ஆக்சன்.. முழு விவரம் உள்ளே!

Saidapet MC Raja Social Justice Hostel: சென்னை சைதாப்பேட்டை எம். சி. ராஜா சமூகநீதி விடுதி மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சமூக நலத்துறைக்கு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். நேற்று ஆய்வு நடந்த நிலையில் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் நேற்று ஆய்வு… இன்று அதிரடி ஆக்சன்.. முழு விவரம் உள்ளே!
சமூகநீதி விடுதி மாணவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 18 Jul 2026 15:14 PM IST

சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் எம். சி. ராஜா சமூக நீதி விடுதியில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நேற்று வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த மாணவர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, முதல்வர் விஜய்யிடம் மாணவர்கள் பல்வேறு குறைகளை தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் சுமார் 20 நிமிடங்கள் ஆய்வை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், எம். சி. ராஜா சமூக நீதி விடுதி மாணவர்கள் அளித்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சமூக நலத்துறைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலை உடனடியாக மாற்ற வேண்டும். சிலிண்டர் தட்டுபாட்டால் நிறுத்தப்பட்ட இட்லி, சப்பாத்தி ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும்.

சமூகநீதி விடுதியில் 12 மணி வரை மாணவர் அனுமதி

எம். சி. ராஜா விடுதியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் கைப்பந்து மைதானத்தை மாணவர்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். விடுதியில் தங்கி இருந்து பகுதி நேர வேலைக்கு செல்லும் மாணவர்கள் இரவு 12 மணி வரை விடுவிக்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகிய உத்தரவுகளை முதல்வர் விஜய் பிறப்பித்துள்ளார். சமூக நீதி விடுதியில் நேற்று முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்ட போது, அவரிடம் சமூக நீதி விடுதி மாணவர்கள் பல்வேறு குறைகளை முன் வைத்தனர். இதில், விடுதியில் வழங்கப்படும் உணவு மிகவும் தரமற்ற முறையில் உள்ளது.

மேலும் படிக்க: தவெக-விற்குச் சென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர்.. கரூரை மீட்டெடுக்க இபிஎஸ் வியூகம்.. புதிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை!

முதல்வரிடம் மாணவர்கள் வைத்த புகார்கள்

இது தொடர்பாக பலமுறை புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக அரசு பல்வேறு வசதிகளுடன் விடுதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தும், இதில் பல்வேறு குறைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். விடுதியில் புழுக்கள் உள்ள அசைவ உணவு தயார் செய்வது குறித்து புகார் கூறப்பட்டதை தொடர்ந்து 5 நாட்கள் தரமான உணவுகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது முன்பு இருந்தது போலவே தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று ஆய்வு- இன்று அதிரடி ஆக்சன்

இங்கு வசிக்கும் மாணவர்கள் பகுதிநேர வேலை செய்து கொண்டும், அரசு போட்டி தேர்வுகளுக்கு படித்துக் கொண்டோம் இரவு 10 மணிக்கு விடுதிக்கு வருகின்றனர். அப்போது, விடுதியின் கதவு மூடப்படுவதால் மாணவர்கள் வெளியே படுத்து தூங்கும் நிலை உள்ளது என்று பெரும் குற்றசாட்டை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பழனி கோயில் நில மோசடி வழக்கு.. சார் பதிவாளர் அலுவலக கதவுகளைப் பூட்டி சிபிசிஐடி விசாரணை!!

Follow Us