AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உலகில் யாரும் செய்யாத சாதனை – வரலாறு படைக்க காத்திருக்கும் ரோகித் மற்றும் விராட் கோலி

IndvsEng : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக 3வது ஒருநால் போட்டி இந்திய நட்சத்திரங்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு மிகவும் சிறப்பானதாக அமையவுள்ளது.

உலகில் யாரும் செய்யாத சாதனை – வரலாறு படைக்க காத்திருக்கும் ரோகித் மற்றும் விராட் கோலி
விராட் கோலி - ரோகித் சர்மா
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Jul 2026 16:07 PM IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக மீண்டு வந்து தொடரை 1-1 என சமன் செய்தது. மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஜூலை 19 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி – ரோகித் சர்மா

இந்தப் போட்டி இந்திய நட்சத்திரங்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு மிகவும் சிறப்பானதாக அமையவுள்ளது. இந்தப் முக்கியமான போட்டிக்கு முன்னதாக, ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. இந்த நிலையில் பிசிசிஐ இந்த வதந்திகளை மறுத்துள்ளது. இதற்கிடையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பங்கேற்கும் இந்தப் போட்டி வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளது. இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்களான விராட் – ரோகித் லார்ட்ஸ் மைதானத்தில் களமிறங்கிய உடனேயே, இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை நிகழ்த்தப்படாத ஒரு மாபெரும் சாதனையை எட்டவுள்ளது.

இதையும் படிக்க : IND vs ENG: ரோஹித் சர்மா திணறுகிறாரா? பேட்டிங் பயிற்சியாளர் கொடுத்த ட்விஸ்ட்!

லார்ட்ஸ் மைதானத்தில் அடியெடுத்து வைக்கும்போது, ​​ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இணைந்து 400 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள மைல்கல்லை எட்டுவார்கள். கிரிக்கெட் வரலாற்றிலேயே இரண்டு இந்திய வீரர்கள் இவ்வளவு அதிகமான சர்வதேசப் போட்டிகளில் இணைந்து விளையாடுவது இதுவே முதல் முறையாகும். ரோகித் சர்மாவுக்கு, விராட் கோலியுடன் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டுவது ஒரு அழகான கவிதை நிஜமாவதைப் போன்ற உணர்வைத் தரும்.\

இதையும் படிக்க : Team India: விரைவில் ரோஹித் சர்மா ஓய்வா..? தொடக்க வீரராக களமிறங்க காத்திருக்கும் 4 வீரர்கள்!

உலக சாதனையைத் தங்கள் வசம் வைத்துள்ள ஜாம்பவான்கள்

இந்தியாவிற்காக இணைந்து அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாடியதில், ரோகித் மற்றும் விராட் ஜோடி ஏற்கனவே விளையாட்டின் பல சிறந்த வீரர்களின் சாதனையை முறியடித்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய ஜாம்பவான் பேட்டிங் ஜோடி மொத்தம் 391 சர்வதேசப் போட்டிகளில் இணைந்து விளையாடி இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளனர். அதேவேளையில், ஒரு ஜோடியாக அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாடியதற்கான உலக சாதனை இலங்கையின் குமார் சங்கக்காரா மற்றும் மஹேல ஜெயவர்த்தனே ஆகியோரின் வசம் உள்ளது. இலங்கையின் இந்த இரண்டு ஜாம்பவான்களும் இணைந்து சாதனை அளவாக 550 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

Follow Us