AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026 Final: சாம்பியன் அணிக்கு மாபெரும் பரிசுத் தொகை.. கோடிகளில் கொட்டப்போகும் பணமழை!

FIFA World Cup 2026 Prize Money: 39 வயதான லியோனல் மெஸ்ஸிக்கும் 19 வயதான லமின் யமாலுக்கும் இடையேயான இந்த மோதல், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்து உலகில் மிகவும் பிரபலமான போட்டியாக ஃபிஃபா உலகக் கோப்பை உள்ளது. அதன்படி, ஃபிஃபா உலகக் கோப்பையில் பெரும் பணப் பரிசுத்தொகை அடங்கியுள்ளது.

FIFA World Cup 2026 Final: சாம்பியன் அணிக்கு மாபெரும் பரிசுத் தொகை.. கோடிகளில் கொட்டப்போகும் பணமழை!
ஃபிஃபா உலகக் கோப்பை 2026
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Jul 2026 15:35 PM IST

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் (FIFA World Cup 2026) இறுதிப் போட்டி அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது அதாவது 2026 ஜூலை 20ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 12:30 மணிக்குத் தொடங்கும். உலகக் கோப்பை வரலாற்றில் அர்ஜென்டினாவும் ஸ்பெயினும் (Argentina vs Spain) இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். 39 வயதான லியோனல் மெஸ்ஸிக்கும் 19 வயதான லமின் யமாலுக்கும் இடையேயான இந்த மோதல், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்து உலகில் மிகவும் பிரபலமான போட்டியாக ஃபிஃபா உலகக் கோப்பை உள்ளது. அதன்படி, ஃபிஃபா உலகக் கோப்பையில் பெரும் பணப் பரிசுத்தொகை அடங்கியுள்ளது. 2026 உலகக் கோப்பைக்காக ஃபிஃபா 871 மில்லியன் டாலர் என்ற சாதனைப் பரிசுத்தொகையை நிர்ணயித்துள்ளது. கிடைத்த தகவலின்படி, சாம்பியன் அணி இந்திய ரூபாய் மதிப்பில் பரிசுத் தொகை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி: லட்சங்களில் விற்ற டிக்கெட்டுகள்.. தொடக்கமே சாதனைதான்!

ரூ. 83,866 கோடி பரிசுத் தொகை

2026 உலகக் கோப்பைக்காக ஃபிஃபா 871 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை நிர்ணயித்துள்ளது. இந்தத் தொகை ஏறக்குறைய 83,866 கோடி இந்திய ரூபாய்க்குச் சமமாகும். இந்த முறை, அணிகளின் எண்ணிக்கை 32-லிருந்து 48-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், முந்தைய பதிப்புடன் ஒப்பிடும்போது பரிசுத் தொகையும் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன் அணிக்கு பணமழை..

2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டி அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறும். வெற்றி பெறும் அணிக்கு 50 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 481 கோடி ரூபாய்) பரிசாக வழங்கப்படும். 2ம் இடம் பெறும் அணிக்கு 33 மில்லியன் டாலரும், 3ம் இடம் பெறும் அணிக்கு 29 மில்லியன் டாலரும், 4ம் இடம் பெறும் அணிக்கு 27 மில்லியன் டாலரும் பரிசாக வழங்கப்படும்.

  1. சாம்பியன் – ரூ 481 கோடி
  2. இரண்டாம் இடம் – ரூ. 317 கோடி
  3. மூன்றாம் இடம் – ரூ. 279 கோடி
  4. நான்காவது இடம் – ரூ. 259 கோடி

48 அணிக்கும் பரிசுத்தொகையா?

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு, 48 அணிகளும் தங்களின் ஆயத்தப் பணிகளுக்காக 2.5 மில்லியன் டாலர்களைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 10 மில்லியன் டாலர்களைப் பெறும், இது தோராயமாக ரூ.9.62 கோடிக்குச் சமமாகும்.

ALSO READ: ஃபிஃபா உலகக் கோப்பை 2026: வீரர்களுக்கு ரெடியாகும் ஸ்பெஷல் மோதிரம்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

காலிறுதிக்கு முன்னேறி, அரையிறுதிக்கு தகுதி பெறாத நான்கு அணிகளுக்கும் தலா 19 மில்லியன் டாலர் வழங்கப்படும். ஒன்பதாவது முதல் பதினாறாவது இடம் வரையிலான அணிகளுக்கு தலா 15 மில்லியன் டாலரும், 17வது முதல் 32வது இடம் வரையிலான அணிகளுக்கு தலா 11 மில்லியன் டாலரும், குழுச் சுற்றைத் தாண்டாத அணிகளுக்கு 10 மில்லியன் டாலரும் வழங்கப்படும். அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்கு 2.5 மில்லியன் டாலர் இதில் அடங்காது.

Follow Us