AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: விரைவில் ரோஹித் சர்மா ஓய்வா..? தொடக்க வீரராக களமிறங்க காத்திருக்கும் 4 வீரர்கள்!

Rohit Sharma Opening Spot: வருகின்ற 2026 ஜூலை 19ம் தேதி லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியே ரோஹித்தின் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது, தொடக்க ஆட்டக்காரராக அவருக்குப் பதிலாக யார் களமிறங்கலாம் என்ற கேள்வியை எழுப்புகிறது.

Team India: விரைவில் ரோஹித் சர்மா ஓய்வா..? தொடக்க வீரராக களமிறங்க காத்திருக்கும் 4 வீரர்கள்!
ரோஹித் சர்மா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Jul 2026 14:55 PM IST

ரோஹித் சர்மா (Rohit Sharma) டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, தற்போது இந்திய அணிக்காக (Indian Cricket Team) ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். ஆனால், இந்த வடிவத்திலும் கூட ரோஹித் சர்மா சில காலமாக தடுமாறி வருகிறார். கடந்த 2025ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ஆடிய 11 இன்னிங்ஸ்களில், ரோஹித் சர்மா 35.18 என்ற சுமாரான சராசரியுடன் 387 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதற்கிடையில், வருகின்ற 2026 ஜூலை 19ம் தேதி லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியே ரோஹித்தின் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது, தொடக்க ஆட்டக்காரராக அவருக்குப் பதிலாக யார் களமிறங்கலாம் என்ற கேள்வியை எழுப்புகிறது. அவரது இடத்திற்குப் பொருத்தமான 4 வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: 14 அணிகள், 3 சுற்றுகள்.. உலகக் கோப்பைக்கான வடிவத்தை மாற்றிய ஐசிசி!

இஷான் கிஷன்

விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான இஷான் கிஷன், கடந்த ஒருநாள் தொடரில் சதம் அடித்தார். இஷான் கிஷன் எந்த இடத்தில் களமிறங்கினாலும் தனது முதல் பந்திலேயே அதிரடியாக அடித்து ஆடக்கூடியவர். இதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் அடித்த சாதனையையும் படைத்துள்ளார். இதனால், இஷான் கிஷனுக்கு 31 போட்டிகளில் 107 ஸ்டிரைக் ரேட்டில் 1093 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் கணிசமான அனுபவத்தையும் வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிவேக இரட்டைச் சதம் அடித்த சாதனையை இஷான் கிஷான் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் களமிறங்கிய இஷான் கிஷன், 125 ரன்கள் எடுத்து ஒரு சிறப்பான இன்னிங்ஸ் ஆடினார்.

யஷஸ்வி ஜெயஸ்வால்

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னணியில் உள்ளார். இந்த இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால், ரோஹித் ஷர்மாவைப் போல அச்சமின்றி விளையாடி, இந்த வடிவத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தனது கடைசி இன்னிங்ஸில், அவர் 86 பந்துகளில் 110 ரன்கள் குவித்து அபாரமாக ஆடினார். அதற்காக ஜெய்ஸ்வாலுக்கு ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், விராட் கோலியின் வருகையால் ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

சாய் சுதர்ஷன்

ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவோர் பட்டியலில் சாய் சுதர்ஷனும் உள்ளார். சுதர்சன் நல்ல நுட்பத்தைக் கொண்டிருப்பதோடு, கடினமான நேரங்களில் இன்னிங்ஸை நிலைநிறுத்தவும் வல்லவர். ஒருநாள் போட்டிகளில், நல்ல பந்துகளை மதிக்கத் தெரிந்த ஒரு வீரர் மிகவும் முக்கியமானவர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தால் சுதர்சன் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

ALSO READ: கேள்விக்குறியாகும் ரோகித் சர்மாவின் எதிர்காலம்? இந்திய அணி எடுத்த முக்கிய முடிவு

அபிஷேக் ஷர்மா

அறிமுகமான சில மாதங்களிலேயே டி20 தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்த அபிஷேக் ஷர்மா, தனது அச்சமற்ற ஆட்டத்திற்காக அறியப்படுகிறார். பவர்பிளேயை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் திறன் அபிஷேக் சர்மாவிடம் உள்ளது. இது ஒருநாள் போட்டிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நிர்வாகம் பரிசீலிக்கக்கூடிய ஒரு தேர்வாகவும் அபிஷேக் ஷர்மா இருக்கிறார்.

Follow Us