AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ind vs Eng : கே.எல்.ராகுல் விளையாடாதது ஏன்? கேப்டன் சுப்மன் கில் பகிர்ந்த தகவல்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது போட்டி கார்டிஃபில் உல்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

Ind vs Eng : கே.எல்.ராகுல் விளையாடாதது ஏன்?  கேப்டன் சுப்மன் கில் பகிர்ந்த தகவல்
கே.எல்.ராகுல்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 16 Jul 2026 20:08 PM IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது போட்டி கார்டிஃபில் உல்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இதற்கிடையில் இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இது ரசிகர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கே.எல்.ராகுல் விளையாடாதது ஏன்?

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் பங்கேற்காதது ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. இந்த நிலைில் இது குறிதது டாஸின் போது கேப்டன் சுப்மன் கில் விளக்கமளித்தார். இது குறித்து பேசிய அவர் சுப்மன் கில், கே.எல்.ராகுலுக்கு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்தப் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக இஷான் கிஷன் இந்த போட்டியில் விளையாடுவார் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : ICC World Cup: 14 அணிகள், 3 சுற்றுகள்.. உலகக் கோப்பைக்கான வடிவத்தை மாற்றிய ஐசிசி!

மேலும் பேசிய அவர், இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் முதல் 6 அல்லது ஏ ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். அதன் பிறகு சிறு அழுத்தம் ஏற்பட்டது. இந்த மைதானத்தில் கிளாமோர்கன் அணிக்காக நான் ஒரு சீசன் விளையாடியுள்ளேன். இந்த மைதானத்தில் எனக்கு நல்ல நினைவுகள் உள்ளன. இதனுடன் இந்தப் போட்டியின் வெற்றி பெறுவதையும் முக்கியமாக கருதுகிறேன். தற்போது எங்கள் கவனம் இந்தப் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுவதில் தான் உள்ளது என்று பேசினார்.

முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி

முன்னதாக பர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 259 ரன்கள் இலக்கை இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக அடைந்தது. அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் சுப்மன் கில் 80 ரன்கள் குவித்தார். அவர் தசைபிடிப்பு காரணமாக பாதியில் வெளியேறிய நிலையில், கடைசிகட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் அரைசதம் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : CSK New Coach: தோனி கையில் சிஎஸ்கே பயிற்சியாளர் தேர்வு.. உற்றுநோக்கும் ரசிகர்கள்..!

இந்த வெற்றியுடன் இந்திய அணி இந்த 2வது போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேப்டன் சுப்மன் கில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்சர் படேல், குர்னூர் பிரார், ஐஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow Us