எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டும் ஏன் காப்பீட்டு தொகை அதிகம்? காரணம் இதுதான்!
காப்பீட்டைப் பொறுத்தவரை, சாதாரண பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரீமியம் சற்று அதிகமாக இருப்பதை பலரும் நினைக்கின்றனர். எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டும் ஏன் காப்பீட்டு தொகை அதிகம் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம் .
இந்தியாவில் சர்வதேச போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் காரணங்களுக்காக மட்டுமல்லாமல், குறைவான பராமரிப்பு செலவுகள் காரணமாகவும் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இருப்பினும், காப்பீட்டைப் பொறுத்தவரை, சாதாரண பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரீமியம் சற்று அதிகமாக இருப்பதை பலரும் நினைக்கின்றனர்.
எலக்ட்ரிக் வாகனக் காப்பீடு ஏன் அதிகம்?
எலக்ட்ரிக் வாகனத்தின் மிக விலையுயர்ந்த பாகம் அதன் பேட்டரி. பல சந்தர்ப்பங்களில், வாகனத்தின் மொத்த விலையில் 30% முதல் 50% வரை பேட்டரியின் விலையே இருக்கும். விபத்து, வெள்ளம், தீ அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பேட்டரி சேதமடைந்தால், அதை மாற்றுவதற்கோ அல்லது பழுதுபார்ப்பதற்கோ லட்சக்கணக்கான ரூபாய் செலவாகலாம். இதன் விளைவாக, மின்சார வாகனங்களுக்கான பிரீமியத்தை நிர்ணயிக்கும்போது காப்பீட்டு நிறுவனங்கள் பேட்டரியின் விலைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
இதையும் படிக்க : புதிதாக பைக் வாங்க போறீங்களா?.. இந்த விஷயங்கள் குறித்து கட்டாயம் யோசிக்க வேண்டும்!




மேலும், மின்சார வாகனங்கள் மேம்பட்ட மின்னணு அமைப்புகள், சென்சார்கள், கண்ட்ரோல் யூனிட்ஸ் மற்றும் சாஃப்ட்வேர் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்தப் பாகங்களைப் பழுதுபார்க்க சிறப்புத் தொழில்நுட்பம் மற்றும் திறமையான பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள். நாட்டின் அனைத்து நகரங்களிலும் மின்சார வாகனங்களுக்கான பழுதுபார்ப்பு மையங்கள் இன்னும் கிடைக்காததால், பழுதுபார்ப்புச் செலவுகள் அதிகமாக இருக்கின்றன. மின்சார வாகனக் காப்பீட்டு பிரீமியம் சற்று அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
நீங்கள் ஒரு எலக்ட்ரிக் வாகனத்தை வாங்குகிறீர்கள் என்றால், உங்கள் காப்பீட்டு பாலிசியில் பேட்டரி பாதுகாப்பு கவரேஜை கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். விபத்து, தண்ணீர் புகுதல், தீ, ஷார்ட் சர்க்யூட் அல்லது பிற மின்சாரக் கோளாறுகளால் ஏற்படும் பேட்டரி சேதங்களுக்கு இந்தக் கவரேஜ் நிதி உதவியை வழங்குகிறது. மின்சார வாகனத்தின் மிக விலையுயர்ந்த பாகம் பேட்டரி என்பதால், இந்தக் கவரேஜ் எதிர்காலத்தில் உங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்த உதவும்.
இதையும் படிக்க : அமேசான் பிரைம் டே: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 50% வரை தள்ளுபடி – விவரம் இதோ
எலக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் நம்பகமானவை என்றாலும், நீண்ட பயணங்களின்போது பேட்டரி சார்ஜ் தீர்ந்துபோவது அல்லது சார்ஜிங் நிலையத்தைக் கண்டறிய முடியாமல் போவது போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். இத்தகைய சூழலில் சாலை ஓர உதவி மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இந்தச் சேவையானது வாகனத்தை இழுத்துச் செல்லுதல் (towing), சாலையோர உதவி மற்றும் தேவைப்படும்போது வாகனத்தை அருகிலுள்ள சார்ஜிங் நிலையம் அல்லது சேவை மையத்திற்கு எடுத்துச் செல்லுதல் போன்ற உதவிகளை வழங்குகிறது.