AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுகவில் 20 கவுன்சிலர்கள் விலகத் தயார்? கோவை கவுன்சிலர் பகிர்ந்த பரபரப்பு தகவல்

கோவை மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலராக உள்ள கோவை பாபு, திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், தன்னுடன் மேலும் 20க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து விலகுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

திமுகவில் 20 கவுன்சிலர்கள் விலகத் தயார்? கோவை கவுன்சிலர் பகிர்ந்த பரபரப்பு தகவல்
கவுன்சிலராக உள்ள கோவை பாபு
Sekaran S
Sekaran S | Updated On: 18 Jul 2026 16:45 PM IST

கோயம்புத்தூர், ஜூலை 18 : கோவை மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலராக உள்ள கோவை பாபு, திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இனி கட்சி சார்பின்றி சுயேச்சை கவுன்சிலராக மக்களுக்காக தொடர்ந்து செயல்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவதுகோவை மாவட்ட திமுகவின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தி இருப்பதாக கூறினார்.

கோவை கவுன்சிலர் பகிர்ந்த பரபரப்பு தகவல்

திமுகவில் ஜனநாயகம் மற்றும் உழைப்பிற்க்கு அங்கீகாரம் இல்லை என்றும் பார்டி பண்டால் பொதுமக்கள் மட்டுமல்ல திமுக தொண்டரும் பாதிக்கட்டுள்ளதாகவும் அதேபோல் திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜியின் செயல்படுகள் கட்சியை ஒரு கம்பெனியை போல் நடத்துவதாக குற்றம்சாட்டி கோவை மாநகராட்சியின் திமுக கவுன்சிலர் கோவை பாபு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதேபோல் கோவையில் கட்டப்பட்டுள்ள செம்மொழி பூங்காவில் முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றசாட்டு இது குறித்து முழுமையான விசாரணை தமிழக அரசுநடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கோவையில் திமுகவை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது விருப்பப்படி நடத்தி வருவதாக குற்றம்சாட்டிய அவர், கட்சிக்குள் நிலவும் சூழல், லஞ்சம் மற்றும் கட்சி நிதி தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திமுகவில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தன்னுடன் மேலும் 20க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து விலகுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுதொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அவர் கூறினார். அதேநேரத்தில், தற்போதைய தமிழக அரசு லஞ்சம், லாப நோக்கம் இன்றி செயல்பட்டு வருவதாகவும், மக்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோவை பாபு தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் வெளிப்படையாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதும், மேலும் பல கவுன்சிலர்கள் விலக உள்ளதாக கூறியிருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us