AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாதி, வருமான சான்றிதழ்களை பள்ளியிலேயே பெறலாம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாதி மற்றும் வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதமாவதாக எழும் புகார்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களது பயிலும் இடங்களிலேயே சான்றிதழ்கள் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

சாதி, வருமான சான்றிதழ்களை பள்ளியிலேயே பெறலாம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
அமைச்சர் செங்கோட்டையன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 22 May 2026 21:07 PM IST

சென்னை, மே 22 : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் மே 22, 2026 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழை காலங்களில் எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் குறித்து முதன்மை செயலாளர் முருகானந்தம் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழ்நாட்டில் நிலவும் வெப்ப அலை குறித்தும் அதில் இருந்து பாதுகாப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், வருவாய் துறையின் அமைச்சராக பொறுப்பேற்றதும் துறையின் செயலாளர்கள் மற்றும் ஆணையர்களுடன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினேன் என்றார்.

இதையும் படிக்க : அவர் எந்த சமூகம் என்றே தெரியாது – சர்ச்சைக்கு ஆதவ் அர்ஜுனா விளக்கம்

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செங்கோட்டையன் ஆய்வு

 

மேலும் பேசிய அவர், தற்போது தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான அறிவுரைகளை வழங்கினேன். மேலும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் உடனடி நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தினேன். எல்லோருடைய பாராட்டுகளையும் பெறும் வகையில் எங்கள் செயல்பாடுகள் இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அவரிடம் தற்போது மின் தடை அதிகமாக உள்ளது, மழை காலங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனை எப்படி எதிர்கொள்வீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் பதிலளிப்பார். மழைகாலங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க அந்த துறை சார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசித்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதையும் படிக்க : “இபிஎஸ் தான் எங்களின் பொதுச்செயலாளர்”… வேலுமணி தரப்பு திடீர் பல்டி.. பின்வாங்க காரணம் இதுதான்?..

சாதி, வருமான சான்றிதழ்களை பள்ளியிலேயே பெறலாம்

பின்னர் அவரிடம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாதி மற்றும் வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதமாவதாக எழும் புகார்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களது பயிலும் இடங்களிலேயே சான்றிதழ்கள் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை விரைந்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

Follow Us