AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெப்பத்துக்கு குட்பை… தமிழகத்தில் இன்றுமுதல் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக மக்களை வாட்டி வதைத்து வந்த வெப்பம் படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பத்துக்கு குட்பை… தமிழகத்தில் இன்றுமுதல் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 Apr 2026 06:37 AM IST

சென்னை, ஏப்ரல் 29: தமிழ்நாட்டில்  ஏப்ரல் 29, 2026 இன்று முதல் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக மக்களை வாட்டி வதைத்து வந்த வெப்பம் படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு திசையில் இருந்து வீசும் தெற்கு காற்று, மேற்கு நோக்கி பயணித்து திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை அடுத்து தெலங்கானா, கர்நாடகா உள்பகுதிக்கு செல்லும் வாய்ப்புள்ளது.  மேலும் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்தம் காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்றுமுதல் மழைக்கு வாய்ப்பு

உயர் அழுத்தம் மற்றும் தென்திசையின் நீராவிக் காற்றும் இணைந்து கடலோர மாவட்டங்களில் மேகமூட்டமாக காணப்படுகிறது. இதையடுத்து, கடலோர மாவட்டங்களில்  ஏப்ரல் 28, 2026  அன்று காலை லேசான மழை பெய்தது என்றும் இந்த மேகம் ஏப்ரல் 28, 2026 நண்பகலுக்கு பிறகு டெல்டாவில் இருந்து விலகிச் சென்று தெற்கு கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி பகுதி தொடங்கி மேகம் உருவாகி லேசான மழை பெய்தது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கன்னியாகுமரி, தென்காசியிலும் நேற்று லேசான மழை தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்தது. மழை பெய்ய தொடங்க உள்ளதால் வெப்பநிலை குறையவும் வாய்ப்புள்ளது. அதே போல இன்றும் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க : கோடை வந்தால் பதநீர் தான் ஹீரோ! தென் மாவட்டங்களில் விற்பனை ஜோர்.!

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன் படி தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 28, 2026 நேற்று மழை பெய்துள்ளது. பிற இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியது. வெப்பநிலையில் குறிப்பிட்டத்தக்க மாற்றம் ஏதும் இல்லை என்றாலும், ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக திருச்சியில் நேற்று 105 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. மேலும், வேலூர், ஈரோடு 104 டிகிரி, கரூர், மதுரை, திருப்பத்தூர் 102 டிகிரி வெப்பநிலை நிலவியது.

இதையும் படிக்க : 106 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை..

இந்நிலையில், வளி மண்டலத்தில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு தெலங்கானா முதல் குமரிக் கடல் வரை, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டுள்ளது. அதனால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை நேற்று பெய்துள்ளது. இது ஏப்ரல் 29, 2026 இன்றும் தொடரும். அதனைத் தொடர்ந்து நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 30, 2026 முதல் மே 2, 2026 அன்றும் வரை கனமழை பெய்யும் என்றும் மே 3, 4, 2026 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow Us