AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை – நகைகள் பறிப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே ஆண் நண்பருடன் பெண் ஒருவர் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கும்பல் அந்தப் பெண்ணை மிரட்டி செல்போன், நகை போன்ற பறித்துக்கொண்டு செனறுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை  –  நகைகள் பறிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Jun 2026 17:13 PM IST

திருவண்ணாமலை, ஜூன் 2 : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவலபாதை அருகே உள்ள ஏரிக்கரையில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்து அவரின் நகைகளை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் ஏரிக்கரையில் தனது ஆண் நண்பருடன் தனியாக பேசிக்கொண்டு இருந்த பெண்ணிடம் இருந்து செல்போன் மற்றும் நகைகளை உள்ளிட்டவற்ற பறித்து சென்ற 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை

திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் ஏரிக்கரையில் மே 31, 2026 அன்று ஆண் நண்பருடன் பெண் ஒருவர் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கும்பல் அந்தப் பெண்ணை மிரட்டி செல்போன், நகை போன்ற பறித்துக்கொண்டு அந்தப் பெண்ணை அரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர்.

இதையும் படிக்க : பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. தவெக நிர்வாகிகள் இருவர் கைது.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஜூன் 2, 2026 திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதன் பேரில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 7 பேரை அழைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் வாசுதேவன், சிவப்பிரகாசம், டேனியல் இசக்கி உள்ளிட்ட 7 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இதுபோன்று பல பெண்களிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தற்போது வாசுதேவன் மட்டும் கைது செய்யப்பட்டு மற்றவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நயினார் நாகேந்திரன் கண்டனம்

 

இதனை கண்டித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மேடைகளில் மகளிர் உரிமை குறித்தும், புதியதொரு மாற்றம் குறித்தும் வாய்ஜாலம் காட்டி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, இன்று முந்தைய திமுக அரசை போலவே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறி முழுமையாக முடங்கி கிடக்கிறது. மக்கள் நடமாட்டம் உள்ள கிரிவலப்பாதை பகுதியிலேயே 10 பேர் கொண்ட கும்பல் இத்தகைய துணிகரமான குற்றத்தில் ஈடுபடுகிறது என்றால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

இதையும் படிக்க : சென்னையில் போதைப்பொருள் விற்பனையை தட்டிக்கேட்ட 23 வயது இளைஞர்.. போதை கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..

இச்சம்பவத்தில் தொடர்புடைய 10 பேர் கொண்ட கும்பலில் தற்போது பிடிபட்டுள்ளவர்கள் மட்டுமின்றி, தலைமறைவாக உள்ள மற்ற அனைவரையும் உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us