சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை.. இரண்டு சிறுவர்கள் கைது.. அதிர்ச்சி சம்பவம்!!
தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளாகி வந்த சிறுமி, ஒரு கட்டத்துக்கு மேல் இவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் அவர்களின் மிரட்டலுக்கு அடிப்படையாமல் முடிந்ததை செய்துகொள் என துணிச்சலுடன் எதிர்கொண்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அரவிந்தன் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை அப்பகுதியில் உள்ள அவரது நண்பர்களுக்கு அனுப்பி பரப்பியுள்ளார்.
செங்கம், ஜுன் 01: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், 14 வயது சிறுமி தொடர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான புகாரில் 15 வயது சிறுவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த திருவள்ளுவர் நகர் காலனியில் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியை அதேபகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற 15 வயது சிறுவன் காதலித்து வந்துள்ளான். அதோடு, சிறுமியுடன் உல்லாசமாக இருந்ததை அவரின் அனுமதியுடன் தனது செல்போனில் வீடியோ பதிவும் செய்து வைத்துள்ளார்.
இதையும் படிக்க: சென்னையில் இளம்பெண் கார் ஏற்றி கொலை.. பாரில் நடந்தது என்ன?.. இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!!
அந்தரங்க வீடியோக்களை பகிர்ந்த காதலன்:
இந்தநிலையில், விக்னேஷ் தனது நண்பனான அரவிந்திடம் தனது செல்போனில் இருவரும் இணைந்து நெருக்கமாக இருந்த வீடியோக்களை காண்பித்ததோடு, அந்த வீடியோக்களை அரவிந்தனுடைய செல்போனுக்கும் அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து, இந்த வீடியோக்களை பெற்ற அரவிந்தன் அதனை சம்மந்தப்பட்ட சிறுமியிடம் காட்டி அவரை மிரட்டி தன்னுடன் உள்ளாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார். அதோடு, அரவிந்தனுடன் காதலன் விக்னேஷும் சேர்ந்து தொடர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
துணிச்சலுடன் எதிர்கொண்ட சிறுமி:
தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளாகி வந்த சிறுமி, ஒரு கட்டத்துக்கு மேல் இவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் அவர்களின் மிரட்டலுக்கு அடிப்படையாமல் முடிந்ததை செய்துகொள் என துணிச்சலுடன் எதிர்கொண்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அரவிந்தன் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை அப்பகுதியில் உள்ள அவரது நண்பர்களுக்கு அனுப்பி பரப்பியுள்ளார். இதனிடையே, அந்த வீடியோ சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக இருந்த அவரது மாமா பையன் பூவரசனுக்கும் பகிரப்பட்டுள்ளது.
பெற்றோருக்கு சென்ற தகவல்:
இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பூவரசனின், தனது தாயாரிடம் அதனை காண்பித்து அவளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பெரியவர்கள் துணையுடன் சிறுமியின் பெற்றோர், காதலன் விக்னேஷ் விக்னேஷ் வீட்டிற்கு சென்று அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளனர். ஆனால், விக்னேஷ் சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக தெரிகிறது.
இதையும் படிக்க: தொடர் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி சுட்டுப்பிடிப்பு.. தென்காசி அருகே பரபரப்பு!!
அதிரடியாக கைது செய்த போலீசார்:
இதனால், கொதித்துபோன சிறுமியின் பெற்றோர், செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விரிவாக எடுத்துக்கூறி புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, விசாரணையை தொடங்கிய போலீசார் சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை பரப்பிய காதலன் விக்னேஷ் மற்றும் அரவிந்தன் மீது ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடலூர் சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். சிறுவர்களே இதுபோன்ற கொடும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.