AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜியோமி 17டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Xiaomi 17T Series Smartphones Introduced | ஜியோமி நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஜியோமி 17டி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஜியோமி 17டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ஜியோமி 17டி சீரீஸ்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 May 2026 16:38 PM IST

இந்திய ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையில் மிக முக்கியமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனமாக ஜியோமி (Xiaomi) உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது ஜியோமி 17டி சீரீஸ் (Xiaomi 17T Series) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் லெயிகா கேமராக்கள், மீடியாடெக் சிப்சட் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், ஜியோமி 17 டி சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜியோமி 17டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

ஜியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்போன்கள் ஒரே சீரிசில் இருந்தாலும், அந்த ஸ்மார்ட்போன்கள் வித்தியாசமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன. இந்த ஜியோமி 17டி ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 120HZ Refresh Rate கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 3,500 நிட்ஸ் வரை பிரைட்னஸ் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே ஜியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.83 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அரசு வழங்கும் இலவச கோர்ஸ்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

இந்த ஜியோமி 17டி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே 17டி ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் Leica Tuned மூன்று செட்அப் கேமரா அம்சம் உள்ளது. அதாவது, 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ, 12 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஆகிய அம்சங்கள் உள்ளன.

விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

  • 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஜியோமி 17டி ஸ்மார்ட்போன் – 749 யுரோவுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.83,500 ஆகும்.
  • 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஜியோமி 17டி ஸ்மார்ட்போன் – 799 யுரோவுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.89,000 ஆகும்.
  • 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஜியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போன் – 899 யுரோவுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.1,02,000 ஆகும்.
  • 12ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஜியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போன் – 999 யுரோவுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.1,14,000 ஆகும்.

இதையும் படிங்க : விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் “Spoiler Messages” அம்சம்.. பயன் என்ன?

இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூன் 04, 2026 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us