AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எக்ஸ் தளத்தில் வீடியோக்களை Reshare, Reupload செய்தால் இனி பணம் இல்லை.. நிறுவனம் முக்கிய நடவடிக்கை!

X Takes New Action To Stop Stolen Videos Get Money | எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ஒரு கணக்கில் இருந்து வீடியோக்கள் எடுத்து மற்றவர்கள் பகிர்வதை தடுக்கும் வகையில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எக்ஸ் தளத்தில் வீடியோக்களை Reshare, Reupload செய்தால் இனி பணம் இல்லை.. நிறுவனம் முக்கிய நடவடிக்கை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 25 May 2026 17:47 PM IST

ட்விட்டர் (Twitter) நிறுவனத்தை டெஸ்லா (Tesla) நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) வாங்கி எக்ஸ் என பெயர் வைத்தது முதலே அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக எக்ஸ் தளத்தில் தங்களது கணக்குகள் வெரிஃபை செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. இவ்வாறு, அவ்வப்போது பல்வேறு புதிய புதிய அம்சங்கள் எக்ஸ் தளத்தில் அறிமுகம் செய்யப்படும் நிலையில், தற்போது ஒரே வீடியோவை பலர் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரே வீடியோவை பலர் பதிவிடுவதால் வரும் சிக்கல்

எக்ஸ் தளத்தில் ஏதேனும் ஒரு தகவலையோ அல்லது வீடியோவையோ பதிவிட்டால் அது மிக வேகமாக வைரலாக தொடங்கிவிடும். குறிப்பாக வைரல் வீடியோக்கள் பதிவிட்ட ஒருசில நிமிடங்களிலேயே வைரலாக தொடங்கும். இந்த சூழலில் ஒரே வீடியோவை எடுத்து பலரும் தங்களது கணக்குகளில் பதிவிடுவர். இதன் காரணமாக அந்த வீடியோவை முதலில் பதிவிட்டவர், வீடியோவை உருவாக்கியவருக்கு பணம் சென்று சேறுவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் தான், இந்த முக்கிய நடவடிக்கையை அந்த நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

இதையும் படிங்க : ஏசியை அடிக்கடி ஆன் மற்றும் ஆஃப் செய்வது மின் கட்டணத்தை குறைக்குமா? அதிகரிக்குமா?

உரியவருக்கு பணம் சென்று சேர முக்கிய நடவடிக்கை

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எக்ஸ் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி நிகிதா பையர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், சிறிய எக்ஸ் கணக்குகளில் இருந்து வீடியோக்களை எடுத்து ஏராளமான கணக்குகள் பதிவிட்டு வருகின்றன என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். கடந்த சில மாதங்களாக சில கணக்குகள், சிறிய கணக்குகளில் இருந்து வீடியோக்களை எடுத்து ரீ அப்லோடு மற்றும் ரீ ஷேர் செய்வதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

இதையும் படிங்க : AI கொடுக்கப்போகும் ஷாக்.. லட்சக்கணக்கான வேலைகளுக்கு ஆப்பு.. அதிர்ச்சி கொடுக்கும் அறிக்கை!

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் முதன்மையாக வீடியோக்களை பகிரும் நபர்களுக்கு மட்டுமே வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us