ஏசியை அடிக்கடி ஆன் மற்றும் ஆஃப் செய்வது மின் கட்டணத்தை குறைக்குமா? அதிகரிக்குமா?
AC Usage Tips : ஒரு சிலர் மின் கட்டணத்தை குறைக்கும் நோக்கில் ஒருமுறை அறை குளிரானதும் ஏசியை ஆஃப் செய்துவிட்டு மீண்டும் ஆன் செய்யும் பழக்கத்தை வைத்திருக்கின்றனர். அப்படி செய்வது உண்மையில் மின் கட்டணத்தை குறைக்காமல் அதிகரிக்கவே செய்யும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏசியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மின்கட்டணமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை தவிர்ப்பதற்காக பலர் இரவு முழுவதும் ஏசியை பயன்படுத்துவதற்கு பதிலாக அறை குளிரானவுடன் ஏசியை அணைத்து விட்டு, மீண்டும் வெப்பம் அதிகரித்ததும் ஆன் செய்யும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இதனால் மின் பயன்பாடு குறைந்து மின் கட்டணம் குறையும் என நம்புகின்றனர். ஆனால் உண்மையில் இப்படி அடிக்கடி ஏசியை ஆன் மற்றும் ஆஃப் செய்வதனால் மின் கட்டணம் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கவே செய்யும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏசியை அடிக்கடி ஆன் மற்றும் ஆஃப் செய்வது மின் கட்டணத்தை குறைக்குமா?
ஏசியை ஒவ்வொரு முறை ஆன் செய்யும்போதும், அதில் உள்ள கம்ப்ரசர் மிக அதிக மின் சக்தியை பயன்படுத்துகிறது. ஏசியின் குளிரூட்டும் செயல்பாட்டை இந்த கம்ப்ரசர்தான் மேற்கொள்கிறது. கம்ப்ரசர் இயங்கத் தொடங்கும்போது மின் சக்தி தேவைப்படுகிறது. அதன் காரணமாகவே ஏசி குளிரூட்டும் பயன்பாட்டை தொடங்கும். இதனால், ஏசியை அடிக்கடி ஆன் மற்றும் ஆஃப் செய்வது கம்ப்ரசரை மீண்டும் மீண்டும் அதிக மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது. இதனால் நீண்ட நேரம் ஏசியை பயன்படுத்துவதை விட, இது அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இதனால் மின் கட்டணம் குறைவதை விட அதிகரிக்கவே செய்யும்.
இதையும் படிக்க : விரைவில் அறிமுகமாகும் ஐபோன் 18 ப்ரோ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?




அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து ஏசிய ஆன் மற்றும் ஆஃப் செய்வது ஏசியின் அதன் செயல்திறனையும் பாதிக்கும், குறிப்பாக ஏசியின் முக்கிய பாகங்களான கம்ப்ரசர் மற்றும் கெபாசிட்டர் அதிக பாதிப்படையும் என்பதால் ஏசி விரைவில் பழுதாக வாய்ப்பு அதிகரிக்கும். பின்னர் மின் கட்டணம் உயர்வதுடன், ஏசியை பழுது பார்க்கும் செலவுகளும் அதிகரிக்கும். இதனால் ஏசியை ஆஃப் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், உடனடியாக மீண்டும் ஆன் செய்யக்கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குறைந்தபட்சம் 30 முதல் 35 நிமிடங்கள் இடைவெளி விட்டு மீண்டும் ஏசியை ஆன் செய்ய வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
தற்போது மார்கெட்டில் கிடைக்கும் நவீன இன்வெர்டர் ஏசிகள் தானாகவே மின்சாரத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. அறை தேவையான வெப்பநிலையை அடைந்தவுடன், கம்ப்ரசர் முழுமையாக நிற்காமல் மெதுவாக இயங்கி மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும். அறை மீண்டும் வெப்பமடைய ஆரம்பித்தால் மட்டுமே அது வேகத்தை அதிகரிக்கும். இதனால், இன்வெர்டர் ஏசி பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து ரிமோட்டை பயன்படுத்தி ஆன் மற்றும் ஆஃப் செய்யாமல் ஆட்டோ மோட் வசதியை பயன்படுத்துவது நல்லது என கூறப்படுகிறது. இந்த வசதி அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப தானாகவே ஏசியின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும்.
இதையும் படிக்க : ஸ்மார்ட்போனில் விரைவில் ஸ்டோரேஜ் Full ஆக என்ன காரணம்?.. இவை தான்!
மின் கட்டணத்தை குறைக்க சில எளிய வழிகள்
- ஏசியின் வெப்பநிலையை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை வைத்திருக்க வேண்டும்
- கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைத்திருக்க வேண்டும்
- ஏசி ஃபில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்
- முறையான சர்வீஸ் செய்து பராமரிக்க வேண்டும்
- பழைய மாடல்களை விட இன்வெர்டர் ஏசிகளை தேர்வு செய்வது நல்லது