அக்னி நட்சத்திரத்துக்கு ஆப்பு வைத்த ஆட்டோ ஓட்டுநர்! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வந்தவாசியின் குளு குளு ஆட்டோ!
Vandavasi Auto Driver Innovative Effort : திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வந்தவாசியில் ஆட்டோ ஓட்டுர் நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் தனது ஆட்டோவின் மேல் பகுதியில் பனை ஓலை, தாவர இலைகளை பரப்பி வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்கிறார்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கோடை வெயிலின் தாக்கம் தலை காட்டத் தொடங்கியது. இதனால், பகல் நேரத்தில் கடுமையான வெயிலும், இரவு நேரங்களில் வெப்பத்தின் தாக்கமும் கடுமையாக காணப்பட்டது. இதனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என அஞ்சப்பட்டது. வானிலை ஆய்வு மையமும் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் கொடூரமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி, வேலூர், மதுரை, திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் பதிவானது. இதனால், கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் பல்வேறு வழிகளை நாட தொடங்கினர். மேலும், கடந்த மே 4- ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. இதனால், கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று மக்கள் அஞ்சத் தொடங்கினர்.
கடும் வெயிலுக்கு நடுவே கோடை மழை பொழிவு
ஆனால், அதற்கு மாறாக தென்காசி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பொழிந்து வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கத்தை சற்று தணித்தது. அத்துடன், காற்றும் பரவலாக வீசத் தொடங்கியதால் வெயிலின் தாக்கமும் பெரிதளவு தெரியவில்லை. இதனால், இந்த ஆண்டு கத்தரி வெயிலின் தாக்கம் பெரிதளவில் இல்லாமல் முடிந்துவிடும் என்று மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கினர். ஆனால், அதற்கு மாறாக கோடை காலம் முடியும் தருவாயில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க: கோவை சிறுமி கொலை சம்பவம்: டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரபரப்பு கடிதம்!




வந்தவாசியில் ஆட்டோ ஓட்டுநரின் வித்தியாசமான முயற்சி
இதனால், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும், இரவு நேரங்களில் வெப்பத்தின் தாக்கத்தையும் மக்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் காற்று வீசினாலும் வெப்பத்தின் தாக்கம் சற்று இருக்க தான் செய்கிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொளுத்தி வரும் கோடை வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள் வித்தியாசமான செயல் முறையில் இறங்கி உள்ளனர். அவர்கள் தங்களது ஆட்டோவின் மேல் பகுதியில் பனை ஓலை, செடி கொடிகள், தாவரங்களின் இலைகள் ஆகியவற்றை பரப்பி உள்ளனர்.
ஆட்டோ மேல் பகுதியில் பனை ஓலை- தாவர இலைகள்
இதன் மூலம், வெயிலின் தாக்கம் நேரடியாக ஆட்டோவின் மீது விழாமல் சற்று வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருப்பதாக கூறுகின்றனர். வந்தவாசி பகுதியில் உள்ள மருதாடு கிராமத்தில் இயக்கப்பட்டு வரும் ஆட்டோவில் இது போன்ற செடி, கொடி, தாவர இலைகளை ஆட்டோவின் ஓட்டுனர் அமைத்துள்ளார். மேலும், ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர் வரை அருந்துவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: கரூரில் பயங்கரம்.. விவசாயி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு.. தீவிர விசாரணையில் போலீஸ்!