AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவை சிறுமி கொலை சம்பவம்: டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரபரப்பு கடிதம்!

NCW sends letter to Tamil Nadu DGP: கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி கொலை சம்பவத்தில் தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்கு தேசிய மகளிர் ஆணையம் பரபரப்பு கடிதத்தை அனுப்பி உள்ளது. அந்த கடிதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.,

கோவை சிறுமி கொலை சம்பவம்: டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரபரப்பு கடிதம்!
சிறுமி கொலையில் டிஜிபிக்கு மகளிர் ஆணையம் கடிதம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 23 May 2026 14:51 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி. இவரது மனைவியும் கட்டட தொழிலாளி ஆவார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் இருந்தார். ஒரு ஆண் குழந்தை உள்ளது. சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5- ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சிறுமி தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், திடீரென அந்த சிறுமி காணாமல் போனார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் அந்தப் பகுதியில் தேடினர். பின்னர், அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமி கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு இருவரை கைது செய்தனர்.

டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்

இந்த நிலையில், கோவை சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்கு, தேசிய மகளிர் ஆணையம் பரபரப்பு கடிதத்தை அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் கோவை சிறுமி கொலை வழக்கு சம்பவத்தில் போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்து 7 நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய கொடூரமான வன்முறை செயல்கள் மிகவும் மனிதாபிமானமற்றவை.

மேலும் படிக்க: மெரினா கடலில் மூழ்கி பள்ளி மாணவன் மாயம்..”விஜய் அண்ணனிடம் சொல்லுங்கப்பா”.. கண்ணீருடன் பரிதவிக்கும் தாய்!!

கொலையாளிகளுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் தெரிவித்துள்ளார். சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்த நிலையில், அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பள்ளபாளையத்தில் அந்த சிறுமியின் வீட்டின் அருகே மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார்.  இவரது வீட்டுக்கு மற்றொரு கட்டட தொழிலாளியான கார்த்திக் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அவ்வாறு வருகையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருக்கும் அந்த சிறுமியிடம் அடிக்கடி சாக்லேட் வாங்கி கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமியின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில், தாய் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த சிறுமி தனது வீட்டின் முன்புறம் தனது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கார்த்திக் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அவரது பைக்கில் அழைத்து சென்றதாக தெரிகிறது. பின்னர், அந்தப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அந்த சிறுமியை கொலை செய்து சடலத்தை கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் பிசி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க: பதவி ஆசையா?.. தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது ஏன்?.. திருமாவளவன் பரபர விளக்கம்!!

Follow Us