AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுரையில் கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து 2 பெண்கள் பலி – அதிர்ச்சி சம்பவம்

மதுரை சிலைமான் புளியங்குளம் பகுதியில் திருமண மண்டபம் கட்டும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மே 22, 2026 இன்று கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்து தனலட்சுமி மற்றும் லெட்சுமி ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.

மதுரையில் கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து 2 பெண்கள் பலி – அதிர்ச்சி சம்பவம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 May 2026 19:29 PM IST

மதுரை, மே 22 : மதுரையில் புதிய கட்டுமானப் பணியின் போது மண் சரிந்து 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சிலைமான் புளியங்குளம் பகுதியில் திருமண மண்டபம் கட்டும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மே 22, 2026 இன்று கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்து தனலட்சுமி மற்றும் லெட்சுமி ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கட்டுமான பணியின் போது முறையான பாதுகாப்பு முறைகள் கடைபிடிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து 2 பெண்கள் பலி

தங்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் உடனடியாக தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு 2 பேரின் உடல்களையும் மீட்டு கோரிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 2 பேரின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : மின்மினி தீவாய் மாறிய ஏழைகளின் ஊட்டி.. ஏற்காட்டில் கோடை விழா கோலாகல தொடக்கம்!

அடித்தளம் அமைக்கும் பணிக்காக குழி தோண்டி கான்கிரீட் கலவை நிரப்பும் பணி நடைபெற்று வந்திருக்கிறது. அப்போது தான் மண் சரிந்து விழுந்து இந்த விபரீத சம்பவம் நடந்திருக்கிறது. அந்த பகுதியில் ஏற்கனவே இருந்த கட்டிடத்தை இடித்துவிட்டு திரையரங்கம் மற்றும் கல்யாண மண்டபத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்திருக்கின்றனர். அப்போது தான் மண் சரிந்து விழுந்து 40 வயதான தனலட்சுமி மற்றும் மதுரை புளியங்குளத்தை சேர்ந்த 60 வயதான லெட்சுமி ஆகிய இருவர் உயிரிழந்திருக்கின்றனர்.

கட்டுமானப் பணிகளுக்கு முறையான அனுமதி பெறப்பட்டதா மற்றும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்.. சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா!

இதே போல கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீலகிரி மாவட்டம் லவ்டேல் காந்தி நகரில் வீடு ஒன்றுக்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக மண்ணை தோண்டும் போது அருகே இருந்த பழைய நகராட்சி கழிப்பிட கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உர்ந்தது.

Follow Us