குடும்ப சண்டையில் புகுந்த மாமியார்.. ஆத்திரத்தில் வெட்டி சாய்த்த மைத்துனர்.. தூத்துக்குடியில் பகீர்!
Thoothukudi Woman Murdered: தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப தகராறில் பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் உறவினர் உள்பட இரு இளைஞர்களை சிப்காட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடும்பத தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், அண்ணா நகர் 12- ஆவது வீதி மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபால் ராஜா. ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி அமுதா. இவர், தனது வீட்டின் முன்பாக பழைய இரும்பு மற்றும் மளிகை கடை நடத்தி வந்தார். இவர்களது மகன் அருண்குமார். இவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் அதே பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அருண்குமார் தினந்தோறும் மது போதையில் வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அருண்குமார் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அருண்குமார் வழக்கம் போல சம்பவத்தன்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, சரஸ்வதிக்கும், அவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
மாமியார் – மருமகள் குடும்பத்தினர் இடையே வாக்குவாதம்
இதை அறிந்த அமுதா சம்பவ இடத்துக்கு வந்து தனது மகனுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. இதில், அமுதாவுக்கும், அவரது மருமகள் சரஸ்வதி குடும்பத்தினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அமுதா வழக்கம்போல தனது மளிகை கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் பயங்கர ஆயுதங்களால் அமுதாவை கொடூரமாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.
மேலும் படிக்க: 28 வயதில் அமைச்சர்.. எளிய குடும்ப பின்னணி.. அவினாசி தொகுதி எம்எல்ஏ கமலியின் பின்னணி என்ன!




அரிவாள் வெட்டில் உயிரிழந்த பெண்
இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயமடைந்த அமுதா ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார். இந்த சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அமுதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அமுதா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அமுதா பரிதாபமாக உயிரிழந்தார்.
உறவினர் உள்பட இரு இளைஞர்கள் கைது
இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய ஆய்வு செய்ததில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் சரஸ்வதியின் சகோதரரான சங்கர் மற்றும் அவரது நண்பர் மதன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில அடைத்தனர்.
மேலும் படிக்க: தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற 7 பட்டியலின அமைச்சர்கள்.. மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் விவரம்!