மின்மினி தீவாய் மாறிய ஏழைகளின் ஊட்டி.. ஏற்காட்டில் கோடை விழா கோலாகல தொடக்கம்!
Yercaud Summer Festival: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஏராளமான வண்ண விளக்குகள், மலர்கள் ஆகியவை அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. 7 நாள்கள் நடைபெறும் விழாவில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான 49- ஆவது கோடை விழா இன்று வெள்ளிக்கிழமை ( மே 22) வெகு விமரிசையாக தொடங்கியது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் நடைபெற்று வரும் இந்த கோடை விழாவை பார்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருவது வழக்கமாகும், அதன்படி, தற்போது தொடங்கியுள்ள கோடை விழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோடை விழாவில் ஏற்காடு நகரின் முக்கிய அடையாளங்களான அண்ணா பூங்கா, ஏரி சாலை, படகு இல்லம், ரோஜா தோட்டம், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில் பகுதி மற்றும் கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் விதவிதமான கண்ணை கவரும் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
தினந்தோறும் மாலையில் கலை நிகழ்ச்சிகள்
சுமார் 7 நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவில், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் தினந்தோறும் மாலை வேளையில் பாரம்பரியமான கலை நிகழ்ச்சிகள், கன்கவர் பரதநாட்டியம், நவீன நடன போட்டிகள், படகு போட்டிகள், நாய்கள் கண்காட்சி, கோல போட்டிகள், மலையற்ற போட்டிகள், சமையல் போட்டிகள் மற்றும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளன.
மேலும் படிக்க: தென்காசி பழைய குற்றால அருவிக்கு போறீங்களா? வனத்துறை வெளியிட்ட அதிரடியான மகிழ்ச்சி செய்தி!




கண்களை கவரும் வகையில் வண்ண விளக்குகள் அமைப்பு
மேலும், பல்வேறு அரசியல் துறைகளின் சாதனை விளக்க கண்காட்சிகள், விரிவான முறையில் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கண்ணை கவரும் வண்ண விளக்குகளுக்கு முன் நின்று கொண்டு செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும், பல சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும், நண்பர்களுடனும் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
மகிழ்ச்சி தெரிவித்து வரும் சுற்றுலா பயணிகள்
தற்போது ஏற்காட்டில் நிலவி வரும் அடர்ந்த பனி மூட்டத்திற்கு நடுவே இந்த மின் விளக்குகளின் வெளிச்சம் வேறொரு விண்ணுலகம் போன்ற நிஜத்தை உருவாக்கி உள்ளது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. மேலும், மழையின் உச்சியில் இருந்து பார்க்கும்போது இந்த வண்ண மின்விளக்குகள் அவ்வளவு அருமையாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: ஊட்டி மலர் கண்காட்சிக்கு போறீங்களா? பஸ் டென்ஷன் இனி இல்ல.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!