AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கொளுத்தும் கோடை வெயிலுக்கு குட்பை.. சிலிர்க்க வைக்கும் சிறுவாணி நீர் வீழ்ச்சி.. ஒரே நாளில் ஒரு ஜாலி ட்ரிப்!

Siruvani Falls Covai Kutralam : தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கோடை வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக கோவை மாவட்டத்தில் உள்ள இந்த குளிர்ச்சியான சுற்றுலா தலத்துக்கு ஒரு முறை சென்று பாருங்கள்.

Gowtham Kannan
Gowtham Kannan | Published: 25 Apr 2026 21:36 PM IST
தமிழகத்தில்  கோடை வெயிலின் கோரத்தாண்டவம்  அதிகமாக காணப்படுகிறது.  இதனால்,  ஏராளமான பொதுமக்கள் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.  அப்படியே,  வீடுகளில் தஞ்சம் அடைந்து இருந்தாலும்,  வீடுகளுக்கு உள்ளேயும்  வெப்பத்தின் தாக்கம்  குறைந்தபாடில்லை.  ஏற்கனவே, தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில்,  குளிர்ச்சியான சுற்றுலா தலங்களை  நோக்கி ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால்,  குளிர்ச்சியான சுற்றுலா தலங்களில்  ஏராளமான சுற்றுலா பயணிகளின்  நடமாட்டம்  அதிகளவு காணப்பட்டு வருகிறது.

1 / 5
அந்த வகையில்,  எங்கெங்கு சுற்றுலா செல்லலாம்  என்ற  மாஸ்டர் பிளானை தயார் செய்வதில் சுற்றுலா பயணிகள்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இதில்,  கோவை மாவட்டத்தில்  குளிர்ச்சியான சுற்றுலா இடமாக விளங்கி வருகிறது  குற்றாலம் சிறுவாணி நீர்வீழ்ச்சியாகும். இந்த பகுதியானது  அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ளது. இதனால்,  காடுகள் வழியாக இந்த நீர்வீழ்ச்சியை  நோக்கிய  சுற்றுலா பயணிகளின்  பயணம்  த்ரில்லிங்காக அமைந்திருக்கும்.

2 / 5
அவ்வாறு  செல்கையில்,  காடுகளின் உள்ளே  ரிங் என  ரிங்காரமிடும்  வண்டுகள்,  கீச் கீச் என  சத்தமிடும்  பல்வேறு வகையான  வண்ணப் பறவைகள்  என  நம்மை ஆர்ப்பரிக்க செய்யும்  வகையில்  இந்த பகுதி அமைந்திருக்கும். அத்துடன்,  முக்கிய இடமான  கோவை குற்றாலம்  சிறுவாணி நீர்வீழ்ச்சி  பகுதியை அடைந்தவுடன்  அங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கொட்டும்  ஆர்ப்பரித்து கொட்டும்  குற்றால அருவியில்  அட்டகாசமான  குளியலை  போட்டுக் கொள்ளலாம். குடும்பத்தோடு  சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக விளங்கி வருகிறது கோவை குற்றாலம் சிறுவாணி நீர்வீழ்ச்சி.

3 / 5
அப்படியே குளியலை முடித்துவிட்டு  சற்று நகர்ந்தால் ஆங்காங்கே  மரங்களால் செய்யப்பட்ட வீடுகள் அமைந்திருக்கும்.  அங்கு,  தங்கியிருந்து  சுற்றுலா அனுபவத்தை  மேலும் மெருகேற்றலாம்.  அதாவது தங்கி இருந்து அந்த பகுதி முழுவதும் சுற்றி பார்த்து  வீடு திரும்பலாம்.  ஒரு நாள் சுற்றுலா பயணத்துக்கு ஏற்ற இடம் ஆகவும்  கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி பகுதி  விளங்கி வருகிறது.

4 / 5
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள  குற்றாலத்தில்  கொட்டும்  நீர்வீழ்ச்சி எவ்வளவு மூலிகை  நிறைந்ததோ,  அதற்கு ஈடாக கோவை குற்றாலம்  சிறுவாணி நீர்வீழ்ச்சியில்   ஆர்ப்பரித்து கொட்டும்  நீரும் அவ்வளவு  மூலிகைகள்  கலந்த  நீராகும்.  எனவே,  கோடை காலத்தில் குளிர்ச்சியான பகுதிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தால்,  கோவை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் சிறுவாணி நீர்வீழ்ச்சி பகுதிக்கு  சென்று வாருங்கள்.இந்த அழகிய சிறுவாணி நீர்வீழ்ச்சியானது  கோவை நகரில் இருந்து  மேற்கு பகுதியில் சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சுமார் ஒரு மணி நேர பயணத்தில் சென்றடையலாம்.

5 / 5
Follow Us