AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வானுயர வளர்ந்திருக்கும் மரங்கள்.. தவழ்ந்திருக்கும் கொடிகள்.. ஆனந்தமான பரிசல் பயணம்.. ஈரோடு அருகே சூப்பர் ஸ்பாட்!

Kodiveri Dam Tourist Spot: தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒன்டே ட்ரிப்புக்கு ஏற்ற இடமாகவும், குறைந்த பட்ஜெட்டில் சென்று வரக்கூடிய இடமாகவும் விளங்கி வருகிறது கொடிவேரி அணைக்கட்டு பகுதி.

Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 27 Apr 2026 13:47 PM IST
தமிழகத்தில்  கொளுத்தும் கோடை வெயிலுக்கு  மத்தியில்  சிலர்  வீடுகளுக்குள் முடங்கி கிடந்தாலும்,  பலர்  தங்களது நண்பர்கள் வட்டாரம் மற்றும் குடும்பத்தினர்களுடன்  எங்கு சுற்றுலா செல்லலாம் என்று  திட்டமிடுவதும்,  அந்த சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்தும்  வருகின்றனர்.  இதில்,  அவர்கள் முதலிடம் அளிப்பது  குளிர்ச்சியான  சுற்றுலா தலங்கள் மற்றும் நீர் வீழ்ச்சி சார்ந்த சுற்றுலா தலங்களுக்கு தான்  என்பது அனைவருக்கும் தெரியும்.  ஏனென்றால்,  தகிக்கும்  வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு ஒரே இடம்  அதுவாக மட்டுமே இருக்க முடியும்.

1 / 5
இதன் காரணமாக,  ஊட்டி,  கொடைக்கானல்  உள்ளிட்ட  குளிர்ச்சியான மலை பிரதேசங்கள்  மற்றும்  நீர்வீழ்ச்சிகள்  சார்ந்த பகுதிகளில்  அதிக அளவிலான  சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு  ஆகிய  மாவட்டங்களை சேர்ந்த  மக்கள் எளிதாக செல்லும் வகையில் ஒரு மிகச் சிறந்த சுற்றுலா  தளம்  இருந்து வருகிறது. அது வேற எதுவும் இல்லை  கொடிவேரி அணைக்கட்டு பகுதி தான்.  இந்த பகுதியில்  அணையின் மேல் பகுதியில் இருந்து  கொட்டும் நீரில்  குளிப்பது  யாருக்கு தான் பிடிக்காது.

2 / 5
இங்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள்  இந்த கொடிவேரி அணையில்  இருந்து  கொட்டும் நீரில்  துள்ளல் குளியல்  போட்டு மகிழலாம்.  இதை முடித்துக் கொண்ட கையோடு  அருகிலேயே அமைந்திருக்கிறது  சிறுவர்கள் பூங்கா.  அங்கு, பச்சை பசேல் என்று  வானுயர வளர்ந்து நிற்கும் மரங்கள், அதன் மேலே தவழ்ந்து  படர்ந்திருக்கும் கொடிகள்  என ஏராளமான  தாவரங்கள் உள்ளன. இங்கு இயற்கையோடு  உறவாடியவாறு  காலாற நடை போட்டு செல்லலாம்.  அதன் அருகிலேயே அமைந்துள்ளது பரிசல் சவாரி.

3 / 5
பல இடங்களில்  படகு சவாரி செய்திருப்போம்.  ஆனால்,  பரிசல் சவாரி  பெரிதளவில் செய்திருக்க மாட்டோம்.  அந்த குறையை  போக்குவதற்காகவே இங்கு அமைக்கப்பட்டுள்ளது  பரிசல் சவாரி குழாம். இங்கு,  பழைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசல் சவாரியை  நாமும் செய்து பார்க்கலாம்.  இவற்றையெல்லாம் சுற்றிப் பார்த்தால் சற்று களைப்பாகுமோ  இல்லையோ  ஆனால்  உறுதியாக பசி எடுக்கும். அந்த பசியை தீர்க்கவே  அந்த பகுதியில் பிரபலமான நன்னீர் மீன்கள்  உணவகங்கள் ஏராளமாக அமைந்திருக்கும்.

4 / 5
அங்கு,  பரிமாறப்படும்  மீன்  உணவுகளை சாப்பிட்டுவிட்டு  மீண்டும் சுற்றுலாவை தொடரலாம்.  கண்டிப்பாக  இங்கு நன்னீர் மீன் உணவுகளை  உண்டாக வேண்டும்  என்பதை  மறவாதீர்கள்.  இந்த முக்கியமான கொடிவேரி அணைக்கட்டு பகுதி  கோவை,  திருப்பூர்,  ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு  ஒரு மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இது  கோடைகால சுற்றுலாவுக்கு ஏற்றும் இடமாக இருக்கும்  என்பதில் துளி அளவும்  சந்தேகமில்லை.

5 / 5
Follow Us