AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மெரினா கடலில் மூழ்கி பள்ளி மாணவன் மாயம்..”விஜய் அண்ணனிடம் சொல்லுங்கப்பா”.. கண்ணீருடன் பரிதவிக்கும் தாய்!!

அங்குத் தன் நண்பர்களுடன் சேர்ந்து கடலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பெரிய அலை ஒன்று சுதர்சனை இழுத்துச் சென்றுள்ளது. அப்போது, அருகில் இருந்தவர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாகக் காப்பாற்ற முயன்ற போதிலும், மாணவன் சுதர்சன் கடலுக்குள் மூழ்கி மாயமானான்.

மெரினா கடலில் மூழ்கி பள்ளி மாணவன் மாயம்..”விஜய் அண்ணனிடம் சொல்லுங்கப்பா”.. கண்ணீருடன் பரிதவிக்கும் தாய்!!
மகனை இழந்து தவிக்கும் தாய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 May 2026 13:58 PM IST

சென்னை, மே 23: சென்னை மெரினா கடற்கரையில் குளித்தபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான பள்ளி மாணவனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தன் மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு அவனது தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த சம்பவம் காண்போரை கண்கலங்க செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சுதர்சன் என்ற மாணவன், அண்மையில் 11ம் வகுப்பு தேர்வை முடித்துவிட்டு, அடுத்த வகுப்பிற்குச் செல்லவிருந்த நிலையில், மே மாத கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளான்.

இதையும் படிக்க: அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி பலி.. விளக்கம் கேட்ட சக மாணவிகளுக்கு மிரட்டல்.. களத்திற்கு வந்த அமைச்சர்!!

அலையில் சிக்கிய பள்ளி மாணவன்:

அங்குத் தன் நண்பர்களுடன் சேர்ந்து கடலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பெரிய அலை ஒன்று சுதர்சனை இழுத்துச் சென்றுள்ளது. அப்போது, அருகில் இருந்தவர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாகக் காப்பாற்ற முயன்ற போதிலும், மாணவன் சுதர்சன் கடலுக்குள் மூழ்கி மாயமானான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மெரினா காவல் நிலைய போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் கடலோரக் காவல் படையினரின் உதவியுடன் மாணவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

“யார்கிட்ட கேட்கணும்னு தெரியல” தாயின் குமுறல்:

மகனைத் தேடி மெரினா கடற்கரையில் காத்துக் கொண்டிருக்கும் அவனது தாய் தேவகி, ஊடகங்களிடம் கண்ணீர் மல்கப் பேசியபோது, “என் பையன் பெரிய பிள்ளை. இப்பதான் 12ம் வகுப்புக்குப் போக வேண்டியவன். லீவு விட்டிருக்காங்கன்னு விளையாட வந்த இடத்துல இப்படி ஆகிடுச்சே. நேத்து சாயங்காலம் அலையில விழுந்த பையன் இன்னும் வெளியில் வரலன்னு சொல்றாங்க. எனக்கு யாரைக் கேட்கணும், யாரிடம் உதவி கேட்கணும்னு தெரியல. என் பையன் எப்பவும் சொல்லுவான், ‘அம்மா, நம்ம விஜய் அண்ணனுக்குத்தான் ஓட்டுப் போடணும், அவர் வருவாருமா’ன்னு சொல்லுவான்”.

“விஜய் அண்ணனிடம் சொல்லுங்கப்பா”

என் பையனோட உயிரா இருக்கிற ‘எங்க விஜய் அண்ணனுக்கு’ யாராவது இந்தத் தகவலைச் சொல்லுங்கப்பா. அவர் வந்தா என் பிள்ளையைத் தேடிக் கண்டுபிடிக்க ஏதாவது கடுமையான நடவடிக்கை எடுப்பாரு. என் அண்ணன் என் பிள்ளையைப் பார்க்க வருவாரு. தயவுசெய்து அவருக்கு இந்தத் தகவலைக் கொண்டு போய் சேருங்க, என் மகனை மீட்டுத் தாங்க” என்று அழுதுகொண்டே உருக்கமாகக் கூறினார்.

இதையும் படிக்க: “12 நாள் ஆட்சியில் 30க்கும் மேற்பட்ட குற்றங்கள்”.. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி.. கோவை சிறுமி கொலை வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!!

தேடுதல் பணி தீவிரம்:

மாணவன் சுதர்சன் கடலில் மூழ்கி நீண்ட நேரமாகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், மெரினா கடற்கரை பகுதியில் பெரும் சோகமும் பரபரப்பும் நிலவி வருகிறது. மீனவர்கள் மற்றும் நவீன மீட்புக் படகுகளின் உதவியுடன் தேடுதல் வேட்டை தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Follow Us