AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுமா? முதல்வரிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

மல்டிபிளக்ஸ் திரையரங்க கட்டணத்தை ரூ.250 ஆக உயர்த்த முதல்வர் விஜய்க்கு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்த அவர்கள் தங்கள் கோரிக்கைய முதல்வர் விஜய்யிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுமா? முதல்வரிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 22 May 2026 18:27 PM IST

சென்னை, மே 22 : தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிப்பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் சுப்பிரமணியம், பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் மல்டிபிளக்ஸ் திரையரங்க டிக்கெட் கட்டணத்தை ரூ.250 நிர்ணயிக்க கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு ?

மல்டிபிளக்ஸ் திரையரங்க கட்டணத்தை ரூ.250 ஆக உயர்த்த முதல்வர் விஜய்க்கு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்த அவர்கள் தங்கள் கோரிக்கைய முதல்வர் விஜய்யிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் திரைப்படங்களுக்கான உள்ளூர் பொழுதுபோக்கு வரியை நீக்க வேண்டும் என்றும் கோரிக்க விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : “இபிஎஸ் தான் எங்களின் பொதுச்செயலாளர்”… வேலுமணி தரப்பு திடீர் பல்டி.. பின்வாங்க காரணம் இதுதான்?..

அமைச்சருடன் திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு

 

திரையரங்குகளுக்கு மக்களின் வருகை வெகுவாக குறைந்து வருவதாக பலரும் கவலை தெரிவித்து வரும் நிலையில் மல்டிபிளக்ஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

முன்னதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்தது. பிரபல நடிகர் விஷால் ராஜ்மோகனுக்கு என்ன முன் அனுபவம் இருக்கிறது? அவருக்கு எப்படி இந்த பதவி சரியாக இருக்கும்? துறை சார்ந்த பிரச்னைகளை அவரிடம் எப்படி எடுத்து செல்வது என்ற கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் ராஜ்மோகனுக்கு ஆதரவாக திரையுலகில் இருந்து பலரும் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

இதையும் படிக்க : கோட்டையை ஆளும் தவெக கூட்டணி அரசு.. “அமைச்சர்கள் மற்றும் இலாகாக்கள்” முழு விவரம்!

இது தொடர்பாக நடிகர் அருண் விஜய் தனது பதிவவில், மக்களின் நம்பிக்கையை பெற்று தேர்தலில் வென்று அதன் பிறகு உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள் தயவு செய்து தற்போதைய முடிவுகளில் தலையிடாதீர்கள். ஒரே துறையை சேர்ந்தவர் என்பதால் அவர் நமது பிரச்னைகளை நன்கு அறிவார். நிச்சயமாக நமக்கு உதவுவார். தயவுசெய்து அவரது முடிவுகளுக்கு மதிப்பளியுங்கள் அனத் விளைவு என்னவாக இருக்கும் என பொறுத்திருந்து பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us