AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவை சிறுமி கொலை வழக்கு.. கைதானவருக்கு மே 27 வரை சிறை.. தப்பியோடிய நபருக்கு கால் முறிவு!!

அதன்படி, சூலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு முதற்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மோகன்ராஜை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை மே 27-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோவை சிறுமி கொலை வழக்கு.. கைதானவருக்கு மே 27 வரை சிறை.. தப்பியோடிய நபருக்கு கால் முறிவு!!
கைதான மோகன் ராஜ்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 May 2026 10:04 AM IST

கோவையில் 10 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான கார்த்தி, போலீஸ் காவலில் இருந்து தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து கை, கால் முறிந்து பலத்த காயமடைந்தார். அவர் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, கோவையில் தங்கியிருந்த கார்த்தி (33) என்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த கொலைக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கார்த்தியின் நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிக்க: “பவர் உங்கள் கையில்.. பவர் கட் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்”.. முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் கோரிக்கை!!

கட்டிடத்திலிருந்து குதித்து தப்பியோட முயற்சி:

விசாரணையின் ஒரு பகுதியாகக் குற்றவாளிகளைப் பிடித்த பிறகு, சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் சோதனை நடத்த முற்பட்டனர். அப்போது கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்திற்குச் சென்றபோது, முக்கிய குற்றவாளியான கார்த்தி போலீஸ் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக அந்தப் பழைய கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்து ஓட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு வலது கை மற்றும் வலது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் உடலின் ஒரு சில பகுதிகளிலும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தீவிர சிகிச்சை மற்றும் சிறைப்பிரிவு மாற்றம்:

கை, கால் உடைந்த நிலையில் கார்த்தி உடனடியாக மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எலும்பு முறிவின் தீவிரத்தன்மையைப் பொறுத்து அவருக்கு அறுவை சிகிச்சை ஏதும் தேவையா என்பது குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தற்போது படுக்கையிலேயே இருக்கும் சூழல் உள்ளதால், கார்த்திக்கான நீதிமன்றக் காவல் நடைமுறைகள் முடிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே இருக்கும் ‘கைதிகளுக்கான பிரத்யேக சிறைப்பிரிவுக்கு’ அவரை மாற்றுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் முழுமையாகக் குணமடைந்து சுயமாக நடக்கும் நிலைக்கு வந்த பிறகே கோவை மத்திய சிறைக்கு மாற்றப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்:

இதற்கிடையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு குற்றவாளியான கார்த்தியின் நண்பர் மோகன்ராஜை நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கான அடுத்தகட்ட பணிகளைச் சூலூர் போலீஸார் மேற்கொண்டனர். அதன்படி, சூலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு முதற்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மோகன்ராஜை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை மே 27-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இரவு முழுவதும் நீடித்த சாலை மறியல்:

இதனிடையே, சிறுமியின் படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் சிறுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் திரண்டு இரவு முழுவதும் விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தவெகவில் இணைய தீவிர முயற்சி? அமைச்சர்களை சந்தித்த பின்னணி இதுவா?..

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அதிகாலையில் பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.

Follow Us