கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு – அதிர்ச்சி தகவல்
Missing 10 Year Old Girl Found Dead : கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி காணாமல்போன நிலையில் மே 22, 2026 குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோயம்புத்தூர், மே 22 : கோயம்புத்தூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே மே 21, 2026 அன்று 10 வயது சிறுமி காணாமல் போயுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமியை காணாததால் பெற்றோர் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு
இந்த நிலையில் மே 22, 2026 இன்று மாலை சூலூர் கண்ணம்பாளையம் அருகே உள்ள குளக்கரையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க : திருச்செந்தூர் கோவிலில் கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சம் முறைகேடு – நடந்தது என்ன?




இதனையடுத்து காவல்துறை உயரதிகாரிகள் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிககை எடுக்குமறு உத்தரவிட்டுள்ளனர். குறிப்பாக சிறுமி கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றனர். காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் பாரதிபுரம் அருணகிரிநாதர் தெருவில் வசிப்பவர்கள் ரகுபதி – பவித்ரா தம்பதி. இவர்களது 10 வயது மகள் தர்ஷினி வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். இந்த நிலையில் மர்ம நபர்கள் சிறுமியை பைக்கில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சிறுமியை மீட்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சிறுமியின் வீட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் கண்ணம்பாளையம் என்ற பகுதியில் உள்ள குளக்கரையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : மின்மினி தீவாய் மாறிய ஏழைகளின் ஊட்டி.. ஏற்காட்டில் கோடை விழா கோலாகல தொடக்கம்!
பெற்றோருடன் ஏற்பட்ட முன விரோதம் காரணமாக குழந்தை கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன 10 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுமிகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினரும் தமிழக அரசும் இந்த விவகாரம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் பலரது கோரிக்கையாக இருக்கிறது.