AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விழுப்புரத்தில் பயங்கரம்.. மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கணவர் செய்த கொடூர சம்பவம்.. எமனாக மாறிய மின் மோட்டார்!

Villupuram Crime: விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் தனது மனைவியின் தலையில் மின் மோட்டாரை தூக்கி போட்டு படுகொலை செய்தார். கஞ்சா போதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரத்தில் பயங்கரம்.. மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கணவர் செய்த கொடூர சம்பவம்.. எமனாக மாறிய மின் மோட்டார்!
விழுப்புரத்தில் மனைவியை கொலை செய்த கணவர் கைது
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 24 May 2026 07:34 AM IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரும், சிவரஞ்சனி என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சிவரஞ்சனிக்கு வேறொரு நபருடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவ்வப்போது தனிமையில் செல்போனில் பேசுவதும், வெளியே சென்று வருவதுமாக இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த சரவணன் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், சிவரஞ்சனி கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தம்பதியிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதும், குடும்பத்தகராறு இருந்து வந்ததும் ஆக தெரிகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு இந்த விவகாரம் தொடர்பாக சரவணன் மற்றும் சிவரஞ்சனி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிவரஞ்சனியின் தலை மீது மோட்டாரை தூக்கி போட்ட கணவர்

இதில், கடும் ஆத்திரம் அடைந்த சரவணன் தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கியதாக தெரிகிறது. பின்னர், அவரை கீழே தள்ளி அங்கிருந்த மின் மோட்டாரை தூக்கி சிவரஞ்சனியின் தலை மீது போட்டு உள்ளார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த சிவரஞ்சனி ரத்த வெள்ளத்தில் அலறி துடித்து மயக்கம் அடைந்தார். இவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பயத்தில் சரவணன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர், இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர்கள் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: கரூரில் பயங்கரம்.. விவசாயி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு.. தீவிர விசாரணையில் போலீஸ்!

தீவிர சிகிச்சையில் பரிதாபமாக உயிரிழந்த சிவரஞ்சனி

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவரஞ்சினியை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிவரஞ்சனிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, சிவரஞ்சனியின் குடும்பத்தினர் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கணவரை கைது செய்த போலீசார்

அதன்பேரில், போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சரவணன் தேடி வந்தனர். இதில், அவரது வீட்டின் அருகே பதுங்கி இருந்த சரவணன் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, சரவணன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பத்தில் சரவணன் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனி ஆகிய இருவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: இனி லேட்டா வந்தா அவ்ளோதான்… பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

Follow Us